தூய ஆவியின் செயல்பாடுகள்
கடவுளைப்பற்றியும், கடவுள் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு நமது மனித அறிவு புரிந்து கொள்ள முடியாம் இருப்பதை நிக்கதேமும், அதனை விளக்குவதற்கு முயற்சி எடுக்கிற இயேசுவைப்பற்றியும் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நிக்கதேம் ஒரு படித்த மனிதர். மறைநூலை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். இறைஉணர்வு மிக்கவர். கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பவர். ஆனால், அவராலே, இயேசுவின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உலகத்தில், ஒன்று எப்படி இயங்குகிறது என்பது தெரியாமலேயே பலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ எப்படி இயங்குகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவைகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றைப்பற்றிய முழுமையான அறிவு இல்லையென்றாலும் கூட, அவற்றின் பயன்பாட்டில் நாம் எந்தவித சுணக்கமும் காட்டுவதில்லை. அதே போலத்தான் தூய ஆவியைப்பற்றிய நமது அறிவும். தூய ஆவியின் செயல்பாடு எப்படி என்பதை நம்மால் அறிய முடிவதில்லை. ஆனால், தூய ஆவியின் செயல்பாடு ஒவ்வொரு...

