இறைவன் வாக்குறுதி மாறாதவர்
திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்கிற சிந்தனையை திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். வாக்குறுதி என்பது என்ன? ஒரு மனிதர் சக மனிதருக்கு “இதைச் செய்கிறேன்” என்று, உறுதி செய்வது தான், வாக்குறுதி. சொல்கிற வாக்கை நிறைவேற்றுவது வாக்குறுதி. இறைவன் பல வாக்குறுதிகளை, தான் படைத்த மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறார். தொடக்க நூலில் நாம் பார்க்கிற முதல் மனிதரிலிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வாக்குறுதி கொடுத்த மனிதர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து தவறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் ஒருபோதும் தவறியது கிடையாது. கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை நிர்பந்தமான வாக்குறுதிகள், நிர்பந்தம் இல்லாத வாக்குறுதிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நிர்பந்தமான வாக்குறுதி என்பது, மனிதன் இதைச்செய்தால், கடவுளும் செய்வதற்கு கட்டுப்பட்டவர் என்பது பொருள். கடவுள் அனைத்தையும் கடந்தவர் என்றாலும்,...