கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுப்போம்
மனித வாழ்வில் நாம் எதைத்தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. இன்று நாம் விழா எடுக்கும் இந்திய அப்போஸ்தலர் புனித தோமையார் நாம் எதைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தம் வாழ்வின் மூலம் நமக்குக் கற்றுத்தருகிறார். தேர்ந்தெடுத்த இரண்டுவகை: 1. கடவுளுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். 2. மனிதனுக்கு உரியவற்றை தேர்ந்தெடுத்தல். கடவுளுக்கு உரியவற்றை நாம் தேர்ந்தெடுக்கும்போது, நாம் சிலுவையைத்தூக்க தயாராக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட சிலுவை. உதாரணமாக, தன்னலம் துறந்து, பொது வாழ்க்கையிலே, பொதுநலத்தில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கும்போது, நமக்கு அவமானங்கள் மட்டுமே கிடைக்கும். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் நம்மைத் திட்டலாம். நம்மீது, அவமானங்களை வாரி இறைக்கலாம். நமது பெரைச் சீரழிக்கலாம். நம்மீது அபாண்டமாக, பழிகளைச் சுமத்தலாம். ஆனால், அந்த சிலுவை தான் நம் வாழ்வுக்கு மீட்பைத்தர போகிறது. நம்மேல் சிலுவையைச் சுமத்தியவர்களுக்கு அழிவைத்தரப்போகிறது. ஏனென்றால், சிலுவையிலே தான் நமக்கு, மீட்பு உண்டு. ஒருவேளை மனிதனுக்கு உரியவற்றைத் தேர்ந்தெடுத்தால், இந்த உலகத்திலே பல சொத்துக்களை...