ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கை
திருப்பாடல் 105: 1, 5, 8 – 9, 24 – 25, 26 – 27 ஒரு சில திருப்பாடல்கள் மிக நீளமானதாக அமைந்திருக்கும். ஒரு சில திருப்பாடல்கள் மிகக் குறுகியதாக இருக்கும். குறுகியதோ, நீளமானதோ, எப்படிப்பட்ட மனநிலையோடு வார்த்தைகளில் ஒன்றித்திருக்கிறோம் என்பதுதான் இங்கே முக்கியமானது. இந்த திருப்பாடல் நீளமான திருப்பாடல். வழக்கமான மற்ற திருப்பாடல்களைப் போல, இறைவனின் மாட்சிமையைப் புகழ்வதற்கான பாடல் தான் இது. உடன்படிக்கைப் பேழையை கொண்டு வரக்கூடிய நிகழ்வை குறிக்கக்கூடிய பிண்ணனியைக் கொண்டதனால், இறைவன் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை இது குறித்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இன்றைய திருப்பாடல் ஆபிரகாமோடும், இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்களோடும் இறைவன் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவூட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆபிரகாம் குழந்தை இல்லாமல் இருந்த காலத்தில், கடவுள் அவர் வழியாக சந்ததியைப் பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஆபிரகாமோ உடன்படிக்கையை மேற்கொள்கிறார். அந்த வாக்குறுதிக்கு உண்மையானவராக இருக்கிறார். இஸ்ரயேலை வழிநடத்திய...