கடவுள் தாமே நீதிபதியாக வருகிறார்
திருப்பாடல் 50: 1 – 2, 5 – 6, 14 – 15 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தவர் மட்டும் அல்ல. அதனை பராமரிக்கிறவரும் கூட. இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளுக்கு ஏற்ப தண்டனை கொடுக்கக்கூடியவரும் அவரே. கடவுள் இல்லையென்றால், பலருக்கு வாழ்க்கை நிச்சயம் கடுமையானதாகத்தான் இருந்திருக்கும். நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்து பலர், அதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அநீதி செய்வோர், தங்களது பலத்தால், அதிகாரத்தால் நேர்மையாளர்களைச் சூறையாடிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரத்தில் ரூபா என்கிற கர்நாடாகாவைச் சேர்ந்த நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்திருக்கிற அவலம் இந்த நாடறியும். இப்படி அநீதிகளுக்கு மத்தியில் நேர்மையாளர்கள் வாழ முடியுமா? என்றால், முடியும் என்பதை, இந்த பல்லவி வார்த்தைகள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் எப்போதும் நேர்மையாளர்களைக் காக்கின்றவராகவும், அநீதி செய்கிறவர்களை எதிர்த்து நிற்கிறவராகவும் இருக்கிறார். கடவுள் காலம் தாழ்த்தலாம். அது வெறுமனே காலம் தாழ்த்துவது அல்ல. மாறாக, அவர்கள்...