மற்றவர்களை உயர்ந்தவர்களாக எண்ணுவோம்
அன்பானவர்களே!!! இந்த உலகத்தில் யாரும் அறிவாளியும், கிடையாது. யாரும் முட்டாளும் கிடையாது. அவரவர் தேவைக்கேற்ப கடவுள் ஞானத்தையும்,புத்தியும்,கொடுக்கிறார். யார் அவரிடம் அதிகமாக கேட்கிறார்களோ அவர்கள் யாவரும் பெற்றுக்கொள்வார்கள். இதை யாக்கோபு 1:5,6 ஆகிய வசனங்களில் காணலாம். ஆனால் நாம் கேட்பதை மிகுந்த நம்பிக்கையோடு கேட்கவேண்டும். இதைதான் நம் தேவன மிகவும் விரும்புகிறார். சில சமயத்தில் நம்மைவிட சிறிய வயதில் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்கும்.வேதத்தில் நாம் 2 அரசர்கள் 5ம் அதிகாரத்தில் 1லிருந்து 13 வரை உள்ள வசனத்தை வாசிப்போமானால் சீரியா மன்னனின் படைத்தளபதி நாமான் போரிட்டு அந்த நாட்டுக்கு பெரும் வெற்றியை வாங்கி கொடுத்தான். ஆனால் அவனோ தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.மன்னனின் நன்மதிப்பை பெற்ற அவன் வலிமை மிக்க வீரனாகவும் இருந்தான். அவன் வீட்டில் இஸ்ரவேல் நாட்டை சேர்ந்த ஒரு சிறு பெண் அவன் மனைவிக்கு பணிவிடை செய்து வந்தாள். சிறுபெண் தன் தலைவியிடம் என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் எலிசாவிடம் சென்றால் அவர் இவர் தொழுநோயை...