Category: Prayers

புதன்கிழமை

திரிகால செபம்     கர்த்தர் கற்பித்த செபம்    இறைவா! விண்ணுலுக தந்தை! என்னோருநாளை துவங்கியுள்ளேன்.இதை எனக்கு என் வாழ்வின்     மற்றுமொரு பகுதியாக அளித்துள்ளீர்.இதனால் நன்றியும்,பெருமகிழ்வும் அடைகிறேன்.இந்த     நாளை இறை  இயேசுவின் வழியாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.     கிருஸ்துவே! என் மிட்பரும்,அரசரும் ஆனவரே! இன்று உம்மை மிகவும் பிரமானிக்கமாய்      பின்தொடர்வேன். என் துன்பங்களை வெல்லும் முயற்சிக்கு உம் ஆசீரையும்,அருளையும் தந்தருளும்     என் மனதை உறுதிப்படுத்தும்.எங்களின் அடைக்கலமாயிரும்,அணைத்து நன்மைகளின் உறைவிடமே!     எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்தருளும்.    இறைவா! என் பெற்றோரையும் நெருங்கிய உறவினர்களையும் ஆசீர்வதியும்.இறைவனின்     இரக்கத்தால் இறந்தவர்களின் ஆண்மாக்கள் இறைவனின் சமாதானத்தைப் பெறுவதாக! ஆமென்    மங்கள வார்த்தை செபம்   காவல் தூதர் செபம்   தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.   முடிவுப் பாடல்

செவ்வாய்க்கிழமை

 திரிகால செபம்     கர்த்தர் கற்பித்த செபம் எல்லாம் வல்ல இறை தந்தாய்! உம்முடைய நன்மை தனத்தின் மூலம் நீர் எனக்களித்த இன்னுமொருநாளுக்காக நன்றி கூறி உமக்கு அர்ப்பனிக்கின்றேன் என்னை ஆசிர்வதியும்.இதனால் என் ஒவ்வொருசெயலும் உம் பெருமையை எடுத்துரைப்பதாக. என் விமரிசையை ஒளிர செய்யும்.என்ஆளுமையை பலப்படுத்தும்.என் இதயத்தை வழிநடத்தும்.    வாரும் இறைவா! உம்முடைய ஏவுதலால் உம் முன் நடப்பேனாக. என் செயல் ஒவ்வொன்றுக்கும்    துணைநிற்பீராக.என் செபமும்,வேலையும் உம்மில் துவங்கி முடிவு பெறுவதாக.விண்ணக      புனிதர்கள் அனைவரும் நான் உம்முடன் இணைந்து உம் ஆசிரால் உம் சித்தத்தை நிறைவேற்ற       வேண்டுமென்று செபிக்க வேண்டுகிறேன்.   என் நண்பர்களையும்,அனைத்தையும் படைத்த இறைவா! இன்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்புடன் பழக உதவும்,அனைவரையும் அன்புடன் அரவணைத்து,    நல்வார்த்தைகளை நல்கி அனைவருக்கும் நான் உதவிக் கரம் நீட்டி வாழ வரமருளும்.ஆமென்.   மங்கள வார்த்தை செபம்   காவல் தூதர் செபம்...

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!  ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாக இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே .  அர்ச்சிஷ்ட மரியாயே! சர்வசுரனின் மாதாவே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.    பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக   ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக, ஆமென்.

பாஸ்கா கால திரிகால செபம்

               (எப்பொழுதும் நின்று கொண்டு)                பரலோகத்திற்கு இராக்கினியோ மனங்களிகூரும்……..                அல்லேலூயா                அதேதெனில் பக்கியவதியான உமது திருஉதரத்தில் அவதரித்தார்                அல்லேலூயா                திருவுளம் பற்றின வாக்கின்படி உயிர்த்தெழுந்தார்                அல்லேலூயா                எங்களுக்காக இறைவனை மன்றாடும்                அல்லேலூயா                எப்பொழுதும் கன்னிகையான மரியோ அகமகிழ்ந்து பூரிப்படைவீர்        ...

கர்த்தர் கற்பித்த செபம்

              பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே உம்முடைய  நாமம் அர்ச்சிக்கப் படுவதாக,                உம்முடிய இராச்சியம் வருக.உம்முடைய  சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,                பூலோகத்தில் செய்யப்படுவதாக.                எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்,எங்களுக்கு தீமை செய்தவர்களை                நங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்.எங்களை சோதனையில்      விழவிடாதேயும் தீமையிலிருந்து எங்களை மீட்டருளும் ஆமென்.