அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தியின் தொடக்கம்
பிரேகு நகரக் குழந்தை இயேசுவின் பக்தி இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் பரவியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்ததென வரலாறு கூறுகிறது .அரும்பெரும் பரம்பரைச் செல்வமாக தன் குடும்பத்தில் வைத்து பேணிபாதுகாத்து வந்த இத்திருச் சுரூபத்தை மரிய மோரிக்-தெ-லாரா என்னும் ஸ்பெயின் நாட்டு இளவரசி பொலிக்செனா லோகோவிட்ஸ் என்ற தன் மகளுக்கு திருமணப் பரிசாக அளித்தாள். திருமணத்துக்குப்பின் பொகிமியாவிலுள்ள தன் கணவனின் இல்லம் செல்லுகையில் இதை அவள் தன்னுடன் எடுத்துச் சென்றாள்.கி.பி.1623 -ம் ஆண்டில் கணவன் மறைந்த பிறகு எஞ்சிய தன் வாழ்நாட்களை பக்திப்பணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க உறுதிபூண்டு இளவரசி பொலிக்சொனா பிரேகு நகர கார்மேல் துறவியருக்கு இந்த திருச்சுருபத்தை கொடுத்தாள். கொடுக்கும்போது அவள் கூறிய இறைவாக்கு இது உலகிலேயே மிகமிக உயர்வாக நான் மதித்துப் போற்றும் தன்னிகரில்லாத தனிப்பெரும் செல்வமான இந்தச் சுறுபத்தை உங்களுக்குச் கொடுக்கிறேன்.குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள்.குறை...