Category: Prayers

PRAYERS FOR HEALING

Look at the picture, read the prayer and then make a wish and read the prayer again… Saint Theresa is known as the Saint of the Little Ways, meaning she  believed in doing the little things in life well and with great love…. She is represented by roses. Saint Theresa’s Prayer: May today there be peace within. May you trust God that you are exactly where you are meant to  be. May you not forget the infinite possibilities that are born of faith. May you use those gifts that you have received, and pass on the love that has been given to you. May...

கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம்

கடற்கரை சகாய மாதா மன்றாட்டு ஜெபம் அருள் மழை பொழியும் கடற்கரை சகாய தாயே துன்பப்படுவோரின் துயர் துடைக்கும் தயை மிகு தாயே இதோ அசைக்க முடியாத முழு நம்பிக்கையுடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம் உமது வல்லமையுள்ள மன்றாட்டினால் எங்களை காத்தருளும  நாங்கள் எவ்வித தவறிலும்/ கேட்டிலும்/ விழாதபடி எங்களைக் கரம்பிடித்து/ வழி நடத்தும் தாயே அன்று இந்த ஆலயத்தையும் இப்பகுதியையும் காப்பாற்ற வேண்டி நீர் வீற்றிருந்த கெபியை இக்கடலுக்கு காணிக்கையாக்கிய  கடற்க்கரை சகாய தாயே எங்களை காத்தருளும் சுனாமி காலத்தில் பொங்கியெழுந்த/ கடலின் சீற்றத்திலிருந்து எங்களை காப்பாற்றிய கருணைத் தாயே எங்கள் மன்றாட்டை இறை இயேசுவிடம் எடுத்துச் சொல்லும் துன்ப துயரங்களிலிருந்து எங்களை காப்பாற்றும் தீராத வியாதிகளிலிருந்து எங்களை விடுவித்தருளும் வறுமையில் வாழும் எங்கள் வாழ்வை வளமாக்கும் எங்களுக்கு சமாதானத்தை தந்தருளும் ஆமென்

பாவ மன்னிப்புக்காக

              பாவ மன்னிப்புக்காக கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரக்கம் காட்டியருளும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும் . என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைபடுத்தியருளும். என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக பாவம் செய்தேன். உமது பார்வையில் தீயது செய்தேன் இதே தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள் இறைவா! மெய்ஞ்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும். தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தந்து புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே  உருவாக்கியருளும். உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும். உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.-ஆமென்.

செபம்

இரக்கத்திற்கான செபம் ஆண்டவராகிய இயேசுவே !எங்கள் மேல் இரக்கம் வையும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்.எங்களைத் தீர்ப்பிடாதேயும்,எங்கள் மூதாதையரின் எல்லாக் குற்றங் குறைகளையும் பாவங்களையும் மன்னித்தருளும்.எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கிவிடும்.எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும் . (காலையிலும் மாலையிலும் 5 நிமிடம் சாஷ்டாங்கம் செய்து இந்தச் செபத்தைச் சொல்ல வேண்டும் )                                                        இயேசுவின் உதவியை வேண்டிச் செபம் இரக்கமுள்ள இயேசுவே !உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம்.உம்மில் நம்பிக்கை வைக்கிறோம் . எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும்.உம்மை அனைவரும் அறிந்து நேசிக்கும்படி செய்ய எங்களுக்கு வரந்தாரும்.அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது அன்பின் மகிமைக்காகவும்,எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரந்தாரும் -ஆமென்.                                                        ஆன்மாக்களுக்காகச்    செபம் ஆண்டவரே !உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழியில் நடத்திச் செல்லும்.இவர்களைச் சார்ந்தவர்களையும் தீமையின் கொடுமையினின்று...

புனிதத்தில் வாழ

புனிதத்தில் வாழ ( சீராக்கின் ஞானம் 23 :1-6 ) தந்தையாகிய இறைவா! என் வாழ்வின் தலைவரே என் வாய் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தாதேயும். அவற்றின் பொருட்டு நான் விழ்ச்சியுறாதவாறு செய்தருளும். என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியருளும். இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்தருளும். தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றியருளும். தகாத விருப்பங்கள் எண்ணங்கள் ஆசைகள் என்னை மேற்க்கொள்ள விடாதேயும். உலக மதிப்பீடுகளுக்கு நான் அடிமையாகாமலும் மனிதனின் பசப்பு வார்த்தைகளை நம்பாமலும் தீய சூழ்நிலைகளுக்குள் வீழ்ந்து விடாமலும் என்னைக் காத்தருளும். என்னை புனிதனாக்கவல்ல உமது தூய ஆவியானவர் எப்பொழுதும் என்மீது அசைவாடி என்னை வழி நடத்துவதை உணரச் செய்தருளும் உமது மீட்பின் கரம் எப்பொழுதும் என்னைத் தாங்கச் செய்தருளும் உம்மையை அறியச் செய்தருளும். தந்தையே உமக்கே நான் சொந்தம். உம்மையே நான் நம்பி வாழ்கிறேன். எந்நாளும் எத்தகைய தீமைக்கும் அடிமையாகாதபடி என்னைக் காத்தருளும். ஆமென்.