† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பார்வை பெறவேண்டும் !

கண்களால் பார்த்தும், உண்மையைக் கண்டுகொள்ளாதவர்கள்பற்றி இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி இயேசு கூறுகிறார்; இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். பார்க்க விரும்புகிறவர்கள் இறைவனின் இரக்கப் பெருக்கை வாழ்வின் எந்த நிகழ்விலும் பார்க்க முடியும். கண்களை மூடிக்கொள்பவர்கள் இறைவனின் பேரன்பை எந்த நிகழ்விலும் காண முடியாது. இது மனம் மாறாத தன்மை என்கிறார் ஆண்டவர். பார்க்க இயலாததும், பார்க்க மறுப்பதும் பாவம். நாம் மனம் மாறவேண்டும். கண்களை அகலத் திறந்து இறைவனின் இருத்தலை ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கத் துணிவோமாக! மன்றாடுவோம்; பார்வையின் ஒளியே இயேசுவே, நீரே எமது ஒளி, நீரே எமது, நீரே எமது வாழ்வு. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீர் எங்களோடு இருக்கிறீர், உரையாடுகிறீர் என்று காண, உணர, அனுபவிக்க எங்களுக்குப் புதிய பார்வையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே...

PERSEVERANCE

“I will rise then and go about the city; in the streets and crossings I will seek Him Whom my heart loves.” –Song of Songs 3:2 When we think of Mary Magdalene, we recall her intense love for Jesus. She received this love from the Holy Spirit (Gal 5:22; Rm 5:5). She received the Holy Spirit in such a powerful way because of her perseverance. Just as Elisha received a double portion of Elijah’s spirit by persevering in sticking with him (2 Kgs 2:1ff), so Mary Magdalene received the Spirit’s gift of love through her perseverance. When almost all Jesus’...

“நான் ஆண்டவரைக் கண்டேன்”

இது பலருக்கு இயற்கை. ஒன்றை ஒருவரிடம் சொல்லச் சொன்னால், சொன்ன செய்தியை மறந்துவிடுவர்.தன்னுடைய அனுபவத்தை விலாவாரியாக விவரித்த பின், புறப்படுவதற்கு முன், ஐயோ ஒன்றை மறந்துவிட்டேனே, இதைச் சொல்லச் சொன்னார் என்று விஷயத்தைச் சொல்லுவார்கள். அவர் சொன்னதை விட தான் அனுபவித்தது, பார்த்தது, கேட்டது, ருசித்தது, ரசித்தது அவ்வளவு ஆழமான அழுத்தத்தையும் தாக்கத்தையும் அது ஏற்படுத்தியிருக்கும். உயிர்த்த இயேசு மரியாவிடம் சீடர்களுக்குச் சொல்லச் சொன்ன செய்தி, “என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” (யோவா20:17)என்பது. ஆனால் மரியா சொன்னதோ முதன் முதலில் “நான் ஆண்டவரைக் கண்டேன்” என்பது. அதன் பின்னரே உயிர்த்த இயேசு சொன்ன செய்தியைச் சொல்கிறார். மகதலா மரியா இவ்வாறு செய்ததன்மூலம் தானும் இயேசுவின் சீடன் என்பதை உறுதிசெய்கிறார். பவுலடியார், தான் ஒரு சீடர், திருத்தூதர் என்பதற்கு ஆணித்தரமான சான்றாக, ‘நானும் உயிர்த்த இயேசுவைக் கண்டேன்’ என்பதையே சான்றாக்குகிறார்.(வாசிக்க 1 கொரி 15:8) ஆகவே தான் ஆண்டவரைக்...

IN LOVE AGAIN

“I remember the devotion of your youth, how you loved Me as a bride, following Me in the desert, in a land unsown.” –Jeremiah 2:2 Remember when you first fell in love with Jesus? Remember what a joy it was to pray? How you loved to be with God and with His people! How you would praise Him in English and other languages! Remember when… Many, however, have lost their first love (Rv 2:4). They still believe; they still pray and serve the Lord. But it’s not the way it was. “Sluggish indeed is this people’s heart” (Mt 13:15). The...

உண்மையான தேடல்

மறைபொருள்(Mystery) என்கிற வார்த்தையின் பொருள் இங்கே கவனிக்கப்படத்தக்க ஒன்று. மறைபொருள் என்கிற வார்த்தையின் பொதுவான பொருள்: புரிந்து கொள்ள முடியாதது, புரிந்து கொள்வதற்கு வெகு கடினமானது. ஆனால், புதிய ஏற்பாட்டில் “மறைபொருள்“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் சற்று வேறுபாடானது. மறைபொருள் என்பது குறிப்பிட்ட சிலருக்கு புரிந்து கொள்ளக்கூடியதும், சிலருக்கு புரிந்து கொள்ள இயலாததுமானதாகும். இந்த அர்த்தத்தில்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு புரிந்து கொள்ள முடியும்? யாருக்கு புரிந்து கொள்ள முடியாது? தேடல் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தேடல் இல்லாதவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. வாழ்வு என்பது ஒரு தேடல். ஒவ்வொரு நிமிடமும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எல்லாரும் இந்த தேடலில் ஈடுபடுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இறையாட்சியைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இயேசு சொல்வதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இறையாட்சியைப்பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க முடியாது. இயேசுவின்...