† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உண்மைக்கு சான்று பகர…

மக்கள் இயேசுவிடம் திரளாக வந்தபோது, அவர்களுக்கு புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும், புதிய சிந்தனைகளைக் கொடுக்க வேண்டும், தனது கருத்துக்கள் மட்டும் தான் மக்களின் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்று, இயேசு ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த, திருச்சட்டத்தைப் பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக மாற்றி, புதிய நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. மக்களுக்கு எது நன்மையோ, அது ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதனையும் சேர்த்தே அவர்களுக்குப் போதிக்கிறார். இதிலிருந்து இயேசுவின் சிந்தனை, மக்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான். இன்றைய உலகின் அறிவு வளர்ச்சி நாம் நினைக்காத வண்ணம் வளர்ந்திருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறது. எது உண்மை? என்பதை அறிவது மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோமா? என்றால், அது கேள்விக்குறிதான். உண்மை என்ன? என்பது தெரிந்திருந்தாலும், அதனை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை....

HOW TO BURN-OUT

“Woe to me, mother, that you gave me birth! A man of strife and contention to all the land! I neither borrow nor lend, yet all curse me.” –Jeremiah 15:10 Jeremiah wished he had never been born. He sat alone while others were partying (Jer 15:17). His pain was “continuous” and his “wound incurable” (Jer 15:18). According to the terminology of “pop-psychology,” Jeremiah was experiencing “burn-out” in his prophetic ministry. In contrast to “pop-psychology,” the Lord in the Scriptures means something very different by the term “burn-out.” “Burn-out” is a good thing. In fact, it is the meaning of life,...

கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார். புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத்...

“JESUS WEPT” (see Lk 19:41)

“Let my eyes stream with tears day and night.” –Jeremiah 14:17 Many people couldn’t care less about the condition of the world, the state of the Church, the destruction of human lives, the breakdown of marriage and family, etc. They just stare at the TV and try to escape from reality through constant indulgence in petty pleasures. We should love the Lord and other people enough to pray: “Let my eyes stream with tears day and night, without rest, over the great destruction which overwhelms the virgin daughter of my people, over her incurable wound” (Jer 14:17). When Jesus saw...

வாழ்வின் சுமைகளை பொறுமையோடு எதிர்கொள்வோம்

வயலில் விளையும் களைகள் விவசாயிகளின் சாபக்கேடு. அவை வளருகிற சமயத்தில் பிடுங்கவும் முடியாமல், வளரவிடவும் முடியாமல் ஒரு விவசாயிபடுகிற துன்பத்தைச் சொல்லிமாள முடியாது. ஏனென்றால், அவைகள் தொடக்கத்தில் கோதுமைப்பயிர்களையும், களைகளையும் அடையாளம் காண முடியாதபடி உருவ அமைப்பில் ஒத்திருக்கின்றன. களைகளை சிறியதாக இருக்கிறபோது பிடுங்குவது எளிது என்றபோதிலும், இரண்டுமே ஒரே போல இருப்பதால், தவறாக கோதுமைப்பயிர்களை பிடுங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், இரண்டையும் வளரவிடுவார்கள். வளர்ந்தபிறகு கோதுமைப்பயிருக்கும், களைகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆனாலும், இப்போது களைகள் நன்றாக தனது வேரை இறுகப்பாய்ச்சிருக்கும். இப்போது களைகளைப் பிடுங்கினால், அதோடு கோதுமையும் பிடுங்கப்பட்டுவிடும். எனவே, அறுவடை நேரம் வரை காத்திருந்து, பொறுமையாகக் களைகளையும், பயிர்களையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த உலகத்தில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. பொறுமையோடு, நம்பிக்கையோடு, உறுதியாக அதைத்தவிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம் என்றால், காலம் கனிகிறபோது, அதை எதிர்த்து வெற்றி...