† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்

விண்ணரசில் மிகப்பெரியவர் யார்? என்ற கேள்விக்கு, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, நடுவில் உதாரணமாக நிறுத்தி, சிறுபிள்ளைகளைப் போல மாறுகிறவர்கள் தான் விண்ணரசில் பெரியவர் என்று பதில் சொல்கிறார். சில பாரம்பரியத்தின்படி, அந்த சிறுகுழந்தை அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்று சொல்வர். ஏனென்றால், அந்தியோக்கு இஞ்ஞாசியாருக்கு “தியோபோரஸ்” என்ற பெயர் உண்டு. அதன் பொருள் “கடவுள் தூக்கினார்” என்பதாகும். அதே போல, இயேசு அழைத்த குழந்தை பேதுருவுடையது என்றும் ஒரு சிலர் சொல்வர். காரணம், வழக்கமாக கேள்விகளைத் துணிவோடு இயேசுவிடம் கேட்பது பேதுரு தான். பேதுருவிற்கு திருமணம் ஆகியிருந்ததால், அவருடைய குழந்தையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்வர். குழந்தைகளிடத்திலே இருக்கக்கூடிய பல குணங்கள், பெரியவர்களிடத்தில் இருந்தால், நிச்சயம் இந்த உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. புதிதானவற்றைப் பார்க்கிறபோது, அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், எது நடந்தாலும், தங்களுக்கு எதிராக எவர் தீங்கிழைத்தாலும், அதை உடனடியாக...

TELL-A-VISION

“Such was the vision of the likeness of the glory of the Lord.” –Ezekiel 1:28 Ezekiel experienced an overwhelmingly awesome vision of the Lord. In this vision, God called Ezekiel to prophesy to the hardened, yet endangered Israelites. The king, Jehoiachin, was already in exile, and the people would soon suffer the same fate. In Ezekiel chapters 2 and 3, the Lord sends Ezekiel to speak His prophetic words of warning to “rebels…hard of face and obstinate of heart” who “will refuse to listen to” Ezekiel (Ez 2:3, 4; 3:7). God tells Ezekiel several times to not be afraid and...

நேர்மறையான பார்வை

மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துயரங்களையும், கவலைகளையும் தான், பெரிதாக நினைத்துக்கொண்டிருக்கிறோமே தவிர, அது நமக்கு தரும் பல இலாபங்களை, வாழ்க்கைப் படிப்பினைகளை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இது எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய சிந்தனையின் விளைவு. நடப்பது கெட்டதாக இருந்தாலும், அதை நோ்மறையாக சிந்தித்தால், நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் மகிழ்ச்சியாக வாழலாம். அது கடினமாக இருந்தாலும், அப்படி வாழ நாம் எடுக்கக்கூடிய முயற்சி, நமக்கு சிறந்த பயிற்சியாக அமையும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 22-27) சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். இது எதிர்மறையாக சிந்தித்தன் விளைவு. இயேசு தான் பாடுகள் படப்போவதை அறிவிக்கிறார். நிச்சயம் இது சீடர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கும் செய்தி இருக்கிறது. இயேசு தான் உயிர்த்தெழப்போவதையும் அறிவிக்கிறார். மொத்தத்தில் இயேசுவின் வார்த்தைகளை நேர்மறையாக எடுத்திருந்தால், அது நமக்கு வாழ்வு தரக்கூடிய, ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடிய செய்தி. அதை...

AFRAID TO THINK?

“It has pleased your Father to give you the kingdom.” –Luke 12:32 Jesus has revealed to us that our future will be a terrible, just punishment forever or perfect love and happiness forever. This revelation is mind-boggling (to put it mildly). We have no experience of “forever,” and the possibility of everlasting punishment is overwhelming. Under these circumstances, many people “shut down,” “freeze up,” and become spiritually paralyzed. They try to forget about eternity, the very goal of this earthly life. Before Jesus revealed His final coming, Judgment Day, and the afterlife, He commanded us: “Do not live in fear,...

”மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்” (லூக்கா 12:48)

திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது வீட்டுப் பணியாளர்கள் அவருடைய வருகைக்காகக் காத்திருந்து அவர் வந்ததும் கதவைத் திறந்து அவரை வரவேற்று, அவருக்குப் பணிவிடை செய்வதே முறை. ஆனால் வீட்டுத் தலைவரே பணியாளரைப் பந்தியில் அமரச் செய்து அவர்களுக்குப் பணிவிடை செய்தால் அது ஆச்சரியமான செயல்தான். இவ்வாறு ஓர் உவமையை இயேசு கூறியதும் பேதுரு அந்த உவமையில் வருகின்ற பணியாளர் யார் என்றொரு கேள்வியை எழுப்புகிறார். அக்கேள்விக்கு இயேசு அளித்த பதில், ”மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்” என்பதே. கிறிஸ்தவ சமூகத்தை வழிநடத்திச் செல்கின்ற பணி வீட்டுப் பொறுப்பாளராகிய பேதுரு போன்ற திருத்தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இப்பொறுப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமக்குக் கொடுக்கப்பட்ட சலுகை, பதவி, அந்தஸ்து ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி, தமக்கென்று ஆதாயம் தேடுகிறவர்களாக அன்றைய திருத்தூதர்களோ இன்றைய திருச்சபைத் தலைவர்களோ செயல்படலாகாது என இயேசு விளக்கிச் சொல்கின்றார். கடவுள் நமக்குத் தருகின்ற திறமைகளும்...