† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
இயேசு எத்தனையோ முறை செபித்திருப்பார். கடவுளிடத்தில் செபம் வழியாக இணைந்திருப்பார். சீடர்களும் நிச்சயமாகக் கவனித்திருப்பார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில் செபம் என்பது அவர்களது வாழ்க்கையின் அங்கம். எனவே நிச்சயம் சீடர்களுக்கு செபிக்கத் தெரியாது என்பது கிடையாது. அப்படியென்றால் ஏன் சீடர்கள், இயேசுவைக் கேட்க வேண்டும்? எதற்காக செபிக்கக் கற்றுத்தர வேண்டும் என்று, ஆசைப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இல்லை. சீடர்களுடைய இந்த நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. ஒரு குழந்தை ஏதாவது வைத்திருந்தால், அதையே மற்றொரு குழந்தையும் கேட்கும். தன்னுடைய வீட்டில் எத்தனையோ, அதைவிட சிறப்பான விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும், அதைத்தான் கேட்கும். சீடர்கள் செபிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை. மாறாக, யோவான் தம் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக்கொடுத்தது போல, தங்களுக்கு கற்றுக்கொடுக்க அழைப்பு விடுக்கிறார்கள். தேவை என்பதை விட, பகட்டிற்காக, பார்வைக்காக நம்மில் பல செயல்பாடுகளில் இறங்குகிறோம். இந்த சமுதாயம் நுகர்வுக்கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது....
Like this:
Like Loading...
“Lord, teach us to pray.” –Luke 11:1 Mass Readings: October 5 First: Galatians 2:1-2,7-14; Resp: Psalm 117:1-2; Gospel: Luke 11:1-4 The Lord, Who is Love (1 Jn 4:8, 16), commands us to love Him with all our hearts (Lk 10:27). However, we will do this only if we love our neighbors as ourselves (Lk 10:27). Love is not a matter of mere feelings and words. We must “love in deed and in truth and not merely talk about it” (1 Jn 3:18). We must be like the Good Samaritan and give hands-on, sacrificial service to those in need, even if...
Like this:
Like Loading...
இறைமகன் இயேசு கற்றுக்கொடுத்த இந்த செபம் ஓர் அழகான இறையியலைக் கொண்ட செபம். ஒரு செபம் எப்படி இருக்க வேண்டும்? என்பதைச் சொல்வதைக்காட்டிலும், நமது அன்றாட வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதை, நமக்கு கற்றுத்தரக்கூடிய செபம். நமது வாழ்வில், நமது இன்றைய நிலை என்ன? கடவுளைத் தேடுகிறோம். உணவிற்காக உழைக்கிறோம். சோதனைகளைச் சந்திக்கிறோம். தீய சிந்தனைகளுக்கு பலியாகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இதுதான்நமது வாழ்க்கை. இதனைக் கடந்து வாழ்கிறவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒரு சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள். நமது வாழ்வில் கடவுள் தான் எல்லாமே என்பதை, இயேசு சிறப்பாக வெளிக்காட்டுகிறார். கடவுள் தான் நமது வாழ்வின் மையம். இது யூதர்களின் இறையியல். எதைச் செய்தாலும், எது நடந்தாலும், ஏதாவது ஒரு வழியில், வகையில் அதில் கடவுள் இருக்கிறார் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே, கடவுள் தான் நமது வாழ்வின் மையமாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த தேவையாக, நமக்கு உண்ண...
Like this:
Like Loading...
“I went to extremes in persecuting the Church of God and tried to destroy it.” –Galatians 1:13 Mass Readings: October 4 First: Sirach 50:1,3-4,6-7; Resp: Psalm 16:1-2,5,7-8,11; Second: Galatians 6:14-18; Gospel: Matthew 11:25-30 At the time this teaching is written, there are terrorist groups that are persecuting Christians in certain Middle East nations “to extremes.” Christians are being driven out of entire regions. They are being beheaded. It seems that the witness to Jesus in these regions is lost forever, and that the witness of these Christians was “in vain” (Is 49:4). Yet the truth is that “the blood of...
Like this:
Like Loading...
மார்த்தாவுக்கும், மரியாவுக்கும் என்ன வேறுபாடு? இதுதான் இன்றைய நற்செய்தியை (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42) வாசித்தவுடன் நமக்கு ஏற்படக்கூடிய உணர்வு. இரண்டு பேருமே நல்ல பண்புகளைக் கொண்டிருந்தனர். இரண்டு பேருமே அவரவர் தேவைக்கேற்றவாறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இரண்டு பேருமே எண்ணத்திலும் சரி, சிந்தனையிலும் சரி, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ”உன் நண்பன் யார் என்று சொல். நீ யாரென்று சொல்வேன்” என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் நண்ராக இலாசர் இருக்கிறார் என்றால், உண்மையில் அவரது பண்புநலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படியென்றால், எந்த ஒரு பண்பு மரியாவையும், மார்த்தாவையும் வேறுபடுத்திக் காட்டுகிறது? மரியா, மார்த்தாவிற்கு இடையேயான வேறுபடுத்திக் காட்டக்கூடிய பண்பு, மார்த்தாவிடத்தில் காணப்படக்கூடிய அடுத்தவரிடத்தில் குறை காணக்கூடிய பண்பு. மார்த்தா இயேசுவைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக, பரபரப்பாகி வேலை செய்துகொண்டிருக்கிறார். அந்த வேலையில் கருத்தூன்றி இருந்திருந்தால், இந்த பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மரியாவின் மீதும்...
Like this:
Like Loading...