† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உண்மையான வாழ்க்கைமுறை

இறைவாக்கினர்கள் பற்றிய, திருச்சட்ட அறிஞர்களின் பார்வை முரணானதாக இருந்தது. அவர்கள் மக்கள் முன்னிலையில், இறைவாக்கினர்களைப் பற்றி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர்கள் போல நடந்து கொண்டார்கள். ஆனால், உண்மையில், இறைவாக்கினர்களின் இறப்பிற்கு காரணமானவர்கள் அவர்களே. அவர்கள் போற்றிய இறைவாக்கினர்கள் அனைவருமே இறந்து போனவர்கள். ஆனால், வாழும் இறைவாக்கினர்களை அவர்கள் கடுமையாக துன்புறுத்தினர். இறந்த இறைவாக்கினர்களுக்கு உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். ஆனால், வாழ்ந்து கொண்டிருந்த இறைவாக்கினர்களுக்கு, இறப்பைப் பரிசாகக் கொடுத்தனர். ”உங்கள் அமாவாசை, திருவிழாக்கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது” (எசாயா 1: 14). ” ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக்கா 6: 8). மேற்கூறிய இறைவார்த்தைகள் தான், இறைவாக்கினர்களின் போதனையின் அடிப்படை சாராம்சம். ஆனால், திருச்சட்ட அறிஞர்களின் வாழ்வுமுறைக்கு எதிரானது இதுதான். இயேசு,...

ZAP!

“Woe to you! You are like hidden tombs over which men walk unawares.” –Luke 11:44 Mass Readings: October 12 Mass Readings: October 12 First: Galatians 5:18-25 ; Resp: Psalm 1:1-4,6; Gospel: Luke 11:42-46 There are false Christians (see 2 Cor 11:26). Like the moon, these Christians may reflect just enough of the light of Christ to attract others. What little light they reflect may attract some who seek escape from the darkness of sin (see 2 Cor 11:13-15). However, these false Christians are like a “bug-zapper” light. If those unfortunate, searching souls get too close to the false Christians, their fledgling faith...

ஒழுங்குகள் காட்டும் ஒழுக்கம்

திருச்சட்ட அறிஞர் ஒருவர், தங்களை இயேசு இழிவுபடுத்துவதாகக் கூறுகிறார். ஆனால், இயேசு இன்னும் அதிக வேகத்தோடு அவர்கள் செய்யக்கூடிய தவறான செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். தங்களுக்கு ஏற்றவாறு அவர்கள் சட்டங்களை, விளக்கினார்கள். உதாரணமாக, ஓய்வுநாளில், யாரும் 1000 அடிக்கு மேல் நடக்கக்கூடாது. நடந்தால் அது ஓய்வுநாளை மீறிய செயலாகும். அதே வேளையில், தாங்கள் வசிக்கும் பகுதியில், ஊருக்கு தொடக்கத்தில் ஒரு கயிறு குறுக்கே கட்டியிருந்தால், அந்த கயிறு வரை, ஒருவரின் வீடாக மாறிவிடும். எனவே, அந்த கயிற்றிலிருந்து, அவர் இன்னும் 1000 அடிகள் நடக்கலாம். அதே போல, ஏதாவது ஒரு இடத்தில், இரண்டு வேளைக்கான உணவை வைத்தால், அதுவரை அந்த மனிதரின் வீடாக மாறிவிடும். அதிலிருந்து இன்னும் 1000 அடிகள் அவர் நடந்து செல்லலாம். இந்த ஒழுங்குகளையெல்லாம் கடவுள் நிச்சயம் கொடுக்கவில்லை. தாங்கள் நினைத்ததை எல்லாம், இந்த திருச்சட்ட அறிஞர்கள் ஒழுங்குகள் என்ற பெயரில் மக்களைப் பின்பற்ற வற்புறுத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏதாவது...

THE OUTS AND INS

“If you give what you have as alms, all will be wiped clean for you.” –Luke 11:41 Mass Readings: October 11 First: Galatians 5:1-6; Resp: Psalm 119:41,43,45,47-48; Gospel: Luke 11:37-41 After Jesus told the Pharisees to cleanse the inside as well as the outside (Lk 11:39-40), He surprisingly encouraged them to give alms, an external activity. By this, Jesus showed that the way to cleanse the inside can be through the outside. For example, drinking to excess is an outside symptom of an inside problem. However, by dealing with the excessive drinking, you may get to its root and thereby...

உண்மையான வாழ்வு வாழுவோம்

உணவருந்துவதற்கு முன் இயேசு தனது கைகளைக் கழுவாவதைக்கண்டு பரிசேயா்கள் வியப்படைந்திருக்க வேண்டும். அது சுகாதாரம் என்பதற்காக அல்ல, மாறாக, அது கடைப்பிடிக்க வேண்டிய சடங்குமுறைகளுள் ஒன்று. மக்கள் மத்தியில் மிகப்பெரிய போதகராக மதிக்கப்படும் இயேசு அடிப்படை சடங்குகளைக்கூட பின்பற்றாதது, பரிசேயர்களுக்கு எரிச்சலையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். பரிசேயர்களுக்கு வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அது காட்டும் உள்ளார்ந்த அர்த்தத்திற்கு கொடுக்க மறந்துவிட்டார்கள். வெளிப்புற அடையாளங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும் என்ற மனநிலை அவர்களுக்கு இருந்தது. அப்படி வாழ்ந்தாலே கடவுள் முன்னிலையில் நீதிமானாக விளங்க முடியும் என்ற தவறான எண்ணம் அவர்களிடத்திலே இருந்தது. இத்தகைய மனநிலையை தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். தினமும் ஆலயத்திற்கு செல்வதும், விவிலியத்தை ஆழ்ந்துபடித்து தியானிப்பதும், திருச்சபைக்கு நம்மால் இயன்றதைக் கொடுப்பதும் மட்டும்தான் கிறிஸ்தவனின் கடமை என்ற பாணியில் நமது வாழ்வை அமைத்துக்கொண்டு உள்ளத்தில் வஞ்சகமும், தற்பெருமையும், பொறாமையும் இருந்தால் நாமும் பரிசேயர்களைப்போலத்தான். அப்படிப்பட்ட நிலைக்கு...