† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உண்மையின் வழிநடப்போம்

நாம் வாழும் உலகம் உண்மையோடு சமரசம் செய்து கொள்ள பழகிவிட்டது. ”என் தந்தை செய்வது தவறுதான். அது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்ய? அவரை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? அவர் என் தந்தை ஆயிற்றே?”. செய்வது தவறு என்பது தெரிந்தாலும், அதனை எதிர்க்க வேண்டும் என்பதோ, அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்பதோ, இலட்சத்தில் ஒருவரின் இலட்சியமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவருமே, இந்த இலட்சத்தில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசையாக இருக்கிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில், நமது வாழ்வு அனுபவத்தில் உண்மையோடு தோழமை கொள்வது எவ்வளவு சவாலான வாழ்வு என்பது நாம் அறியாதது அல்ல. ஆனால், அதனை வாழ்வதற்கு நாம் தயார் இல்லை. மார்ட்டின் லூதர் கிங் கத்தோலிக்கத் திருச்சபையில் நடந்து வந்த ஒருசில செயல்பாடுகள், உண்மையான விசுவாசத்திற்கு எதிரானது என்று நினைத்தார். அதனை உண்மையாக ஏற்றுக்கொண்டார். பலமிக்க திருச்சபையை எதிர்ப்பது, மற்றவர்கள் பார்வையில்...

CHOSEN ONES

“This man is the instrument I have chosen.” –Acts 9:15 Mass Readings: January 25 First: Acts 22:3-16; Resp: Psalm 117:1-2; Gospel: Mark 16:15-18 St. Paul was chosen to: “bring [God’s] name to the Gentiles and their kings and to the people of Israel” (Acts 9:15), “suffer for [Jesus’] name” (Acts 9:16), recover his “sight and be filled with Holy Spirit” (Acts 9:17), be baptized into Jesus (Acts 9:18; Rm 6:3), “proclaim in the synagogues that Jesus was the Son of God” (Acts 9:20), silence his opponents “with his proofs that this Jesus was the Messiah” (Acts 9:22), know God’s “will,...

நம்பிக்கைகொண்டோர், நம்பிக்கையற்றோர்

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கையற்றோர் என்ற இருவகையான மனிதர்களைப்பற்றி நற்செய்தி கூறுகிறது. இயேசு தன் சீடர்களிடம் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நற்செய்தி அறிவிக்க கட்டளையிடுகிறார். இயேசுவின் இந்த நற்செய்தியை நம்பாமல் இருப்பதே மிகப்பெரிய குற்றமாகச்சொல்லப்படுகிறது. அவர்கள் தண்டனைத்தீர்ப்பு பெறுவர் என்ற கடுமையான சொல் இங்கே பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் அந்த நற்செய்தியை ஏற்றும், அதை வாழ்ந்து காட்டாமல் இருக்கக்கூடிய நம்முடைய வாழ்வை நினைக்கும்போது சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவராக இருப்பது கிறிஸ்துவை முன்மாதிரியாகக்கொண்டு, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்வாக்குவது. அது ஏதோ பெயரளவில் வாழக்கூடியது அல்ல. அது ஓர் அர்ப்பண வாழ்வு. ஒவ்வொரு மணித்துளியும் இறைநம்பிக்கையோடு வாழக்கூடிய வாழ்வு. இப்படிப்பட்ட வாழ்வைத்தான் தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள். நற்செய்தியை வாழ்வாக்க, பெற்றுக்கொண்ட நம்பிக்கைக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். பல்வேறு கொடுமைகளுக்கு தங்கள் உடல் உள்ளாக்கப்பட்ட போதிலும், நம்பிக்கையை மறுதலிக்காமல் அதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். இன்றைக்கு நாம்...

MYSTERY

“By this ‘will,’ we have been sanctified through the offering of the body of Jesus Christ once for all.” –Hebrews 10:10 Mass Readings: January 24 First: Hebrews 10:1-10; Resp: Psalm 40:2,4,7-8,10-11; Gospel: Mark 3:31-35 God has graciously revealed Himself to us through creation, history (especially the Exodus), the Jewish people, the Law, the prophets, Wisdom literature, the covenants, the priesthood, the Davidic dynasty, etc. Nevertheless, “in times past, God spoke in fragmentary and varied ways” (Heb 1:1). “In this, the final age, He has spoken to us through His Son” (Heb 1:2). Jesus is the eternal, incarnate, and final Word....

உண்மையான உறவு

உண்மையான உறவு என்பது இரத்தம் தொடர்பான உறவல்ல. அது உணர்வுப்பூர்வமான உறவுமல்ல. அது இறையரசு தொடர்பான உறவு. இறையரசுடனான உறவில் இருக்கிறவர்கள் கடவுளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவர்கள். கடவுளுக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறவர்கள். கடவுளுக்காக, தங்கள் வாழ்வில் எதற்கும் தயாராக இருக்கிறவர்கள். அப்படி வாழ்கிறவர்கள் தான் இயேசுவின் சகோதர, சகோதரிகள். கடவுளின் பிள்ளைகள். இந்த உலகில் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளின் நிலை நமக்குத்தெரியாதது அல்ல. ஒன்றாகப்பிறந்தவர்கள், ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள், உறவாடி மகிழ்ந்தவர்கள், தங்களுக்கு திருமணம் ஆனவுடன், தங்களுக்கென்று குழந்தைகள் பிறந்து குடும்பம் சகிதமாக மாறியவுடன், தங்களோடு உடன்பிறந்தவர்கள் எதிரிகளாக மாறிவிடுகின்றனர். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள், ஒருவர் மற்றவரைத்தாக்கி இறப்பது அன்றாட செய்தித்தாள்களில் நாம் காண முடிகிறது. அதேபோல, உணர்வுப்பூர்வமான உறவும் நிலையானது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறவர்கள் தான் உண்மையான உறவைக்கொண்டிருக்க முடியும். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. இறையரசு என்னும் சமூகத்தைக் கட்டியெழுப்ப...