† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மாற வேண்டிய வாழ்க்கை முறை

நம்மை நாம் தீர்ப்பிடுவதை விட, அடுத்தவரை நாம் தீர்ப்பிடுவது நமக்கு எளிதானதாக இருக்கிறது. நாம் செய்யக்கூடிய குற்றங்கள் நமக்கு அவ்வளவாக கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால், அடுத்தவர் செய்யும் குற்றங்கள், அதிலும் குறிப்பாக, யாரை நாம் வெறுக்கிறோமோ அவர்கள் செய்யும் குற்றங்கள் நமக்கு மிகப்பெரிதாக தெரிகிறது. நாம் சாதாரண நிலையில் இருக்கிறபோது, அது மற்றவர்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, நமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை அடக்கி ஆளவும், பழிவாங்கவும் நினைக்கிறோம். அதையே செய்கிறோம். அப்படிப்பட்ட அதிகாரவர்க்கத்தினரின் பழிவாங்கலுக்கு பலியானவர் தாம் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. ஆனால், தனக்கு அதிகாரம் இருந்தாலும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தன்னுடைய போதனைகளை வாழ்வாக்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களின் பாதங்களைக் கழுவி, ஒரு முன்மாதிரியாக வாழ்ந்தவரும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துதான். இயேசுவின் போதனைகள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு மிகமுக்கிய காரணம் அவருடைய வாழ்க்கை முறை. தொண்டாற்ற விரும்புகிறவர் தொண்டனாக இருக்க...

THE TRIDUUM

“The disciples then did as Jesus had ordered, and prepared the Passover supper.” –Matthew 26:19 Mass Readings: April 12 First: Isaiah 50:4-9;Resp: Psalm 69:8-10,21-22,31,33-34;Gospel: Matthew 26:14-25 Today we celebrate the last Mass of Lent. We pray that these forty days of fasting, prayer, and sacrifice have prepared us for the Triduum. “The Easter Triduum begins with the Evening Mass of the Lord’s Supper, reaches its high point in the Easter Vigil, and closes with evening prayer Easter Sunday” (Ordo, see also General Norms, 19). The Triduum is essentially a seventy-hour worship service with breaks for rest and other necessities. Jesus...

காட்டிக்கொடுத்தால் என்ன தருவீர்கள்?

யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து “இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வை இன்று நாம் தியானிப்போம். “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது” (லூக் 16: 13) என்ற இயேசுவின் சொற்கள் இந்த நிகழ்விலே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். பணத்துக்காக இயேசுவையும், இயேசுவின் மதிப்பீடுகளையும் காட்டிக்கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்பொழுதெல்லாம் பணத்தின்மீது அதிக ஆசை கொள்கிறோமோ, பணத்துக்காக பாவத்தை, குற்றங்களை, லஞ்ச ஊழல்களைச் செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். இதில் ஐயமில்லை. பணத்தைப்...

THE GORY IN GLORY

“Jesus,” reclining, “grew deeply troubled.” –John 13:21 Mass Readings: April 11 First: Acts 5:27-32,40-41;Resp: Psalm 30:2,4-6,11-13; Second: Revelation 5:11-14; Gospel: John 21:1-19 During Holy Week, we recall a week of extreme suffering, pain, and trauma for Jesus. As we reflect on Jesus’ sufferings, we too may be having an extremely difficult week. As we look at our lives, we may feel we have “toiled in vain, and for nothing, uselessly, spent” our strength (Is 49:4). Like Jesus, we may grow “deeply troubled” (Jn 13:21). We are tempted to let Satan enter our hearts (see Jn 13:27), or we are broken-hearted...

இறைவனின் அளவற்ற அன்பு

யூதாசின் சதித்திட்டம் மிகவும் கொடூரமான ஒன்று. நடிப்பதில் அவன் கைதோந்தவனாக இருந்திருக்க வேண்டும். வெளிவேடத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மற்ற சீடர்கள் மட்டும், யூதாஸ் செய்யப்போகிற காரியத்தைத் தெரிந்திருந்தால், அவனை உண்டு, இல்லையென்று ஆக்கியிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு யூதாஸ் செய்யப்போகிற காரியம் தெரியவில்லை. மற்றவர்கள் அறியாதவண்ணம், உணராத வண்ணம் யூதாஸ் திறமையாக மூன்று ஆண்டுகளாக நடித்திருக்கிறான். அத்தனைபேரை ஏமாற்ற முடிந்த யூதாசால், இயேசுவை ஏமாற்றமுடியவில்லை. யூதாஸ் செய்யவிருப்பது தவறு என்பதை உணரும் வண்ணம், அவனது தவறிலிருந்து திருந்துவதற்கு இயேசு உண்மையில் பல கட்ட முயற்சி செய்கிறார். எப்படியாவது தனது சீடன், இந்த தவறிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று நிச்சயம் ஆசைப்பட்டிருப்பார். ஆனால், யூதாஸ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் தெளிவாக இருந்தான். அவனுடைய மனம், இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை. இறுதியாக, தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், இயேசு யூதாசிடம் செய்ய வேண்டியதை விரைவாகச் செய்ய வேண்டிக்கொள்கிறார். அந்த வார்த்தைகள் நிச்சயம்...