† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள் இயேசு தனது போதனையிலே எவ்வளவோ வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவரது போதனையில் நிலைத்திருக்கிறவர்கள் அரும்பெரும் செயல்களைச் செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். தனது மழைப்பொழிவிலே, நீதியின்நிமித்தம் துன்பங்களைச் சந்திக்கிறவர்கள் விண்ணரசில் இடம்பெறுவார்கள் எனப்போதித்து இருக்கிறார். நம்பிக்கையோடு கடவுளிடம் கேட்கும்போது நிச்சயம் நாம் பெற்றுக்கொள்வோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். தாழ்ச்சியோடு வாழ்கிறவர்களை கடவுள் உயர்த்துவார் என்று, தாழ்ச்சியுள்ளவர்களை மேன்மைப்படுத்தியிருக்கிறார். இந்த போதனைகள் அனைத்துமே நடக்குமா? நிறைவேறுமா? என்று கேட்டால், நம்மில் பலபேருக்கு அது சந்தேகம் தான். கடவுளை நம்புகிற நம்மில் பலபேர், அவர் சொன்னதெல்லாம் நடக்கும், இறைவார்த்தையில் சொல்லப்பட்டதெல்லாம் நடந்தேறும் என்று நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், இன்றைய நற்செய்தி கடவுளின் வார்த்தை உண்மையானது, அது நிச்சயம் நடந்தேறும் என்பதை தெளிவாக்குகிறது. இயேசு உயிர்த்தார் என்கிற செய்தி நிச்சயம் பலபேருக்கு நம்பக்கூடிய செய்தியாக இருந்திருக்காது. ஏனென்றால், இதுவரை எத்தனையோ மனிதர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பி வந்தது கிடையாது. இப்போது இயேசு தான்...
Like this:
Like Loading...
“I had rather one day in Your courts than a thousand elsewhere.” –Psalm 84:11 Mass Readings: April 15 First: Genesis 1:1–2:2; Second: Genesis 22:1-18; Gospel: Matthew 28:1-10 The first Holy Saturday was a day without Jesus. He was buried in the tomb, and, because of the Sabbath, His body could not be anointed (Lk 23:56–24:1) or even visited (Mt 28:1). Today the Church relives that first Holy Saturday without Jesus. The Blessed Sacrament does not reside in the tabernacle today. There is no Mass during the day. We identify with Jesus buried in the tomb (see Rm 6:3-4). Mary Magdalene...
Like this:
Like Loading...
கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை நம்பிக்கை உயிர்ப்பு. நற்செய்தியாளர்கள் உயிர்ப்பு என்னும் கண்ணாடி வழியாகத்தான் இயேசுவின் வாழ்வை நமக்கு, இறைவார்த்தையாக தந்திருக்கிறார்கள். இத்தகைய அடிப்படை நம்பிக்கைக்கு இன்றைய வாசகம் ஒரு மிகப்பெரிய சான்றைத்தருகிறது. அதுதான் வெற்றுக்கல்லறை. ஆயத்தநாளுக்கு முந்தைய நாள் இயேசுவை அடக்கம் செய்கிறார்கள். ஆயத்தநாளுக்கு அடுத்தநாள் விடியற்காலையில் பெண்கள் கல்லறைக்குச்செல்கிறார்கள். அங்கே ஆண்டவரின் உடலைக்காணவில்லை. கல்லறை வெறுமையாக இருந்தது. கல்லறை வெறுமையாக இருந்தது என்றால், இரண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்று சீடர்கள் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது இயேசு உயிர்த்திருக்க வேண்டும். இயேசுவின் உடலை சீடர்கள் எடுத்துச்சென்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், மத்தேயு 27: 62 முதல் உள்ள இறைவார்த்தைகளில் நாம் பார்க்கிறோம்: தலைமைக்குருக்களும், பரிசேயர்களும் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள். காவலர்களின் பாதுகாப்பை மீறி, சீடர்களால் இயேசுவின் உடலை திருடியிருக்க முடியாது. அப்படியே, சீடர்கள் இயேசுவின்...
Like this:
Like Loading...
He was “smitten for the sin of His people.” –Isaiah 53:8 Mass Readings: April 14 First: Isaiah 52:13–53:12;Resp: Psalm 31:2,6,12-13,15-17,25; Second: Hebrews 4:14-16; 5:7-9;Gospel: John 18:1–19:42 Jesus died for my sins, I who consider myself among the worst of sinners (1 Tm 1:15). He was pierced for my offenses, crushed for my sins (Is 53:5). In the face of such sacrificial, redeeming, committed, unconditional love, I have sometimes reacted selfishly and sinfully toward the One Who gave His life for me, instead of responding to His unconditional love with trusting abandon. Yet, Lord Jesus, instead of abandoning me when I...
Like this:
Like Loading...
”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும். ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது தந்தையைச் சார்ந்தது. பிள்ளை எப்படி வளர வேண்டும்? என்பதை தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் தந்தை இருக்கிறார். அவருடைய வழிநடத்துதல் குடும்பத்தல் இருக்கிற பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது. தந்தையைப்...
Like this:
Like Loading...