† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்

ஒரு மரத்தை நாம் நடுகிறோம்? எதற்காக? அதிலிருந்து பயன் பெறுவதற்காக, பலன் பெறுவதற்காக. எதை நாம் செய்தாலும், அதிலிருந்து பலன் எதிர்பார்க்கிறோம். இந்த உதாரணத்தைத்தான் நமது வாழ்விற்கு ஒப்பிட்டு இயேசு இன்றைய நற்செய்தியில் (+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17) பேசுகிறார். ”நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்”. இந்த இறைவார்த்தையில் இரண்டு அர்த்தங்களை நாம் பார்க்கலாம். 1. கனி தர வேண்டும். 2. அந்த கனி நிலைத்திருக்க வேண்டும். சீடர்களை இயேசு அழைத்தது இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான். சீடர்கள் அனைவரும் பலன் தர வேண்டும். சீடர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அதாவது சீடர்கள் நற்செய்தி அறிவிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நற்செய்தி மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அந்த நற்செய்தி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல, போதிக்கக்கூடிய சீடர்களின் வாழ்வும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த...

அகமகிழ்ந்து ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்

எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை தாவீது அரசர் காலத்தில் தான், மக்கள் அதிகமாக உணர்ந்தனர். அதற்கு தாவீதின் முயற்சியும் ஒரு காரணம், யெருசலேம் நகரை, கடவுளின் நகரமாக மாற்றியதில், தாவீதின் பங்கு மிக அதிகம் உண்டு என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. மக்களை ஒன்றிணைக்க, எருசலேம் நகரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும் என்பதில், அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இந்த திருப்பாடல் (திருப்பாடல் 122: 1 – 2, 4 – 5) இந்த பிண்ணனியில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்ரயேல் மக்கள் பல திருவிழாக்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த திருவிழாக்களை எருசலேமில் கொண்டாடினர். திருவிழாக்களைக் கொண்டாடுவதற்காக அவர்கள் எருசலேம் வருகிறபோது பாடுகிற பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எருசலேம் என்பதை, நம்முடைய புரிதலில் விண்ணக வீடாக எடுத்துக்கொள்ளலாம். விண்ணகம் தான் நமது நிலையான இல்லம். அந்த விண்ணக இல்லத்தில் நுழைவதைத்தான் நாம் நமது வாழ்வின் இலக்காகக் கொள்ள வேண்டும். அந்த இல்லத்தில்...

BEAR THE MOST ABUNDANT FRUIT

“He who lives in Me and I in him, will produce abundantly.” –John 15:5 Mass Readings: May 17 First: Acts 15:1-6; Resp: Psalm 122:1-5; Gospel: John 15:1-8 Listen to the Mass Readings We must bear fruit: the fruit of holiness and evangelization, or be “like a withered, rejected branch, picked up to be thrown in the fire and burnt” (Jn 15:6; also 15:2), and be trimmed to increase our yield (Jn 15:2), by being attached to Jesus, the Vine (Jn 15:4-5), abundantly (Jn 15:5), and thereby glorify God the Father (Jn 15:8), and become Jesus’ disciples (Jn 15:8), for Jesus...

FIGHTING OVER THE WILL

” ‘Peace’ is My farewell to you, My peace is My gift to you.” –John 14:27 Mass Readings: May 16 First: Acts 14:19-28;Resp: Psalm 145:10-13,21; Gospel: John 14:27-31 Listen to the Mass Readings In Jesus’ last will and testament, He left His disciples the gift of shalom-peace. This means He left us a godly order and harmony in our lives. Jesus’ Church is the executor of His will in that He has given it the responsibility of spelling out the details of shalom-peace. If we accept our inheritance from the Lord and listen to His Church, we will have a...

உலகம் தரமுடியாத அமைதி

தனி மனிதர்களும், சமூகங்களும், நாடுகளும் நாடித் தேடும் ஒன்று அமைதி. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தாலும், பல நாடுகளும் போர்களாலும், உள்நாட்டுக் குழப்பங்களாலும் அமைதியின்றி தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாடுகூட, பொருளாதார வளர்ச்சி பெற்றாலும், அண்டை நாடுகளாலும்,  தீவிரவாதத்தாலும் அமைதியின்றித் தவிக்கின்றது. ஆயுதங்களால் உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியாது. உறவால்தான் முடியும். குடும்பங்களிலும் இன்று அமைதியற்ற சூழல். கணவன்-மனைவிக்கிடையே, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே அமைதியின்றி வாழும் நிலை காண்கிறோம். பணமோ, பொருள்களோ அமைதியைத் தர இயலாது. உறவுதான் அமைதியைத் தரும். முதலில், இறைவனோடு நல்லுறவு கொள்வோம். அப்போது, உலகம் தர இயலாத அமைதியை அவர் நமக்குத் தருவார். மன்றாடுவோம்: அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~அருட்தந்தை குமார்ராஜா