† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இறையாட்சியைப் பற்றிக்கொள்வோம்

இயேசு வாழ்ந்த காலத்தில் பணத்தை சேமித்து வைப்பதற்கு வங்கிகள் இல்லாமல் இல்லை. ஆனால், சாதாரண மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றார்போல வங்கிகள் இல்லை. செல்வந்தர்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். சாதாரண மக்கள் நிலத்தில் தாங்கள் சேர்த்து வைத்ததைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. இதில் அவர்களுக்கு வேறு ஒரு நன்மையும் இருந்தது. பாலஸ்தீனப்பகுதி அடிக்கடி போரினால் தாக்கப்படும் பகுதியாக இருந்தது. பகைநாட்டவர் வரும்போது தங்களின் நிலங்களை விட்டுவிட்டு மக்கள் ஓடினாலும், திரும்பிவந்து, தங்கள் நிலத்தில் புதைத்து வைத்திருக்கிற பணத்தை பாதுகாப்பாக எடுக்க முடியும். எனவே, சாதாரண எளிய மக்கள், நிலத்தில் பணத்தைப் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இயேசு இந்த நற்செய்தியின் மூலம் நமக்குக் கற்றுத்தரும் செய்தி இறையாட்சிக்கு நம்மை தகுதிபடுத்திக்கொள்ள நம்மையே இழக்க முன்வர வேண்டும். இந்த உலகத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு இறையாட்சி. அதுதான் நமது முதன்மையான நோக்கம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் எதை...

BLOOD REPLACEMENT

“This is the blood of the covenant which the Lord has made with you in accordance with all these words of His.” –Exodus 24:8 Mass Readings: July 29 First: Exodus 24:3-8; Resp: Psalm 50:1-2,5-6,14-15;Gospel: John 11:19-27 Listen to the Mass Readings We have made a covenant of blood with God. Because life is in the blood (Lv 17:11), we have made a covenant of life with God. Our covenant with God is literally a matter of life and death. Because we have broken the covenant by our sins, we forfeit our lives and are doomed to destruction. Almost two thousand...

நல்ல சிந்தனைகள்

வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற நிலம். நிலம் பலனைக் கொடுக்க வேண்டும் என்று தான், நாம் எதிர்பார்ப்போம். அதேபோல, கடவுளும் நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கிறார். இந்த நிலத்தில் பலர் வந்து, தங்களது கருத்துக்களை, சிந்தனைகளை நாம் வாழக்கூடிய சமுதாயத்திலிருந்து விதைக்கிறார்கள். அந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாகவும் இருக்கலாம். கெட்ட சிந்தனைகளாகவும் இருக்கலாம். ஆனால், இரண்டுபட்ட சிந்தனைகளும் நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளில், களைகளும் காணப்படுகின்றன. அந்த களைகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை கவனமாகப் பிடுங்கி எறிய வேண்டும். நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளை நாம் வடிகட்ட வேண்டும். நல்ல சிந்தனைகளையும், கெட்ட சிந்தனைகளையும் தரம் பிரிக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை நமது உள்ளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றும் வண்ணம், தொடர்ந்து சிந்தித்து தெளிவு பெற வேண்டும். கெட்ட சிந்தனைகளை நம்முடைய சிந்தனைகளின் நினைவிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும். வாழ்வின் வெற்றி பெறுவதற்கான வழி, நமது சிந்தனைகளை நாம்...

ROBBED BLIND

“The evil one approaches him to steal away what was sown in his mind.” –Matthew 13:19 Mass Readings: July 28 First: Exodus 20:1-17; Resp: Psalm 19:8-11; Gospel: Matthew 13:18-23 Listen to the Mass Readings How much of God’s Word have you heard over the years at home, in church and school, through reading and teaching? How much of God’s Word do you know and live? The difference in the answer to these two questions shows us how much the evil one has robbed us. Many of us have been exposed to God’s Word for years but have little to show...

இறைவார்த்தையின் மகத்துவம்

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த விவசாயிகள் விதைகளை விதைப்பதற்கு இரண்டு முறைகளைப் பயன்படுத்தினர். இந்த விதைக்கும் முறையைப் பயன்படுத்தி, இயேசு மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், அழகான ஒரு உவமையை நமக்குத் தருகிறார். நிலத்தில் இறங்கி விதைகளைத்தூவுவது முதல்முறை. ஒரு கழுதையின் மீது விதைப்பையை வைத்து, இரண்டு பக்கங்களிலும் சிறிய துளையிட்டு, கழுதையை நிலம் முழுவதும் நடக்கச்செய்வது இரண்டாம் முறை. ஆனால், இரண்டாம் முறை வெகு அரிதாக நடைமுறையில் இருந்தது. முதல் முறைதான் விதைக்கும் முறையாக பரவலாக இருந்தது. இன்றைய நற்செய்திப் பகுதியில் விதைப்பவர் விதைகளைத் தூவுகிறார். இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்ற போது, இந்த நிகழ்வு நடந்திருக்க வேண்டும். அந்த நிகழ்வை அப்படியே தனது போதனையாக மாற்றுகிறார். எளிய மக்களின் வாழ்வுமுறையிலிருந்து போதிப்பது, இயேசுவின் தனிச்சிறப்பு. இயேசுவின் போதனை இரண்டு அடித்தளத்தை உள்ளடக்கியது. முதலாவது இறைவார்த்தையைக் கேட்பவர்களுக்கானது. இரண்டாவது இறைவார்த்தையைப் போதிப்பவர்களுக்கானது. இரண்டு பேருமே இறைவார்த்தையின் மீது ஆர்வம் உள்ளவர்களாக, நம்பிக்கை உள்ளவர்களாக, செயல்படுத்துகிறவர்களாக இருக்க...