† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது

September 2022 | Bible Quiz – 93 ( I Thessalonians ) – [ in English ] திருப்பாடல் 19: 1 – 2, 3 – 4 கடவுளின் மாட்சிமையை, மேன்மையை இயற்கை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதை, இந்த திருப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. படைப்பை நாம் உன்னிப்பாக கவனிக்கிறபோது, பலவற்றை இந்த படைப்புகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அது ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, கடவுளால் படைக்கப்பட்டிருந்தால், அது எல்லா நாட்களிலும், எல்லா காலங்களிலும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரவிற்கு பின் பகல் என்பது கடவுள் வகுத்த நியதி. இன்று வரை, அதில் மாற்றம் இல்லை. படைப்பு என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இயற்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மனிதனும் கடவுளின் படைப்பு தான். ஆனால், மனிதன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்? என்பதுதான் ஆசிரியரின் ஆதங்கமாக இருக்கிறது. மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும்,...

THE CRY OF THE POOR

“He who shuts his ear to the cry of the poor will himself also call and not be heard.” –Proverbs 21:13 If we don’t listen to the cry of the poor, our prayer will not be heard by God. If we give a beggar some money, have we heard his cry? If we don’t give him money, have we not heard his cry? Jesus proclaimed that His mission was to preach Good News to the poor (Lk 4:18). However, this Good News was not only about providing immediate needs but also freedom. Jesus described His Good News for the poor...

ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை.

லூக்கா 8:16-18 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் செய்கிற எதையும் கடவுள்முன் மறைக்க முடியாது. அவர் அனைத்தையும் அறியும் ஆண்டவர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகவே மறைவாய் செய்யும் பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற அவசரச் செய்தியோடு வேகமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். பாவங்களுக்கு நம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும். முயன்றால் முடியாததது உண்டோ? இரண்டு முயற்சிகளை எடுத்து பார்ப்போமா. 1. பயம் தீமையின் மீதான தெய்வபயம் கண்டிப்பாக இருக்க வேண்டும். தெய்வபயம் பாவத்தின் தொல்லைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. தெய்வபயம் பாவத்தினால் வரும் விளைவுகளை நம் கண்முன் நிறுத்துகிறது. நமக்கு தடை போடுகிறது. 2. பாசம் கடவுள் மீது...

WORD-WORK

“Take heed, therefore, how you hear.” –Luke 8:18 Many Catholics in our culture have been conditioned to passively hear God’s Word and be mere spectators at Mass. However, the Lord calls His Word “seed” (Lk 8:11) and ourselves “ground.” Any farmer knows that ground is full of life, that is, organisms, nutrients, chemical processes, etc. We not only work the ground, but the ground works on anything in it — from graves to seeds. We are the ground. We work on and with the seed of God’s Word. We are to be very active in relationship to God’s Word. God’s...

அற்ப அற்புதங்களா?

(யோவான் 6 : 22-29) உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர். இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே....