† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல என்பதை உணர்கிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, இந்த உலகத்திற்கு சொந்தமானவர்...

LIFE TO THE FULL

“We admonish all men and teach them in the full measure of wisdom, hoping to make every man complete in Christ.” –Colossians 1:28 Jesus came that we “might have life and have it to the full” (Jn 10:10). Today’s first reading reveals the fullness Jesus wants us to have: full sufferings. We “fill up what is lacking in the sufferings of Christ” in our own flesh (Col 1:24) for the good of others, the fullness of God’s Word (Col 1:25), full glory – beyond price (Col 1:27), full revelation (Col 1:26) of what was once a mystery but is now...

எழுந்து நடுவே நில்லும்

தாழ்வு மனப்பான்மை என்பது இந்த நவீன உலகத்தில் அதிகரித்து வரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையை வைத்து வியாபாரம் செய்யும் ஒரு குழு, அதனைப் பயன்படுத்தி பணத்திற்கு மேல், பணத்தைச் சம்பாதித்து வருகிறது. தாழ்வு மனப்பான்மை, இந்த சமுதாயத்தில் பல்வேறு குற்றங்கள பெருகவும் காரணமாக அமைந்துவிடுகிறது. இப்படி இந்த உலகம், தாழ்வு மனப்பான்மையினால், சிக்கித்தவிக்கும் சூழ்நிலையில், இயேசுவின் வார்த்தைகள், இந்த எதிர்மறையான மனநிலையைப்போக்கக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. யூத சமுதாயத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள், ஏழைகள், வறியவர்கள் அனைவருமே பாவிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள். அவர்கள் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்கள் இழிவாகப் பார்க்கப்பட்டனர். அவர்கள் பொது இடத்தில் இருப்பதற்கு கூட, அனுமதி மறுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பிண்ணனி உள்ள நிலையில், கைசூம்பிப்போன மனிதர் ஒருவரை, ”எழுந்து நடுவே நில்லும்” என்று சொல்கிறார். எழுந்து நிற்பது என்பது சாதாரண வார்த்தையல்ல. அது ஒருவருக்கு அதிகாரத்தைக் கொடுக்கும்...

WARNING SIGNS

“You shall warn them for Me.” –Ezekiel 33:7 Millions of parents are killing their newly-conceived children by the “pill,” Depo-provera, Norplant, and other abortifacient methods. If we don’t speak out to dissuade these people from sinning and killing, we will be partially responsible for their deaths, meaning their deaths due to sin, which is ultimately damnation (see Ez 33:8). Each of us probably know people who are racially prejudiced, taking advantage of others in their business, committing sexual sins, being unforgiving to their enemies, or committing other sins. If we do not warn these people and call them to repent,...

குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்

விண்ணரசில் மிகப்பெரியவர் யார்? என்ற கேள்விக்கு, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, நடுவில் உதாரணமாக நிறுத்தி, சிறுபிள்ளைகளைப் போல மாறுகிறவர்கள் தான் விண்ணரசில் பெரியவர் என்று பதில் சொல்கிறார். சில பாரம்பரியத்தின்படி, அந்த சிறுகுழந்தை அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்று சொல்வர். ஏனென்றால், அந்தியோக்கு இஞ்ஞாசியாருக்கு “தியோபோரஸ்” என்ற பெயர் உண்டு. அதன் பொருள் “கடவுள் தூக்கினார்” என்பதாகும். அதே போல, இயேசு அழைத்த குழந்தை பேதுருவுடையது என்றும் ஒரு சிலர் சொல்வர். காரணம், வழக்கமாக கேள்விகளைத் துணிவோடு இயேசுவிடம் கேட்பது பேதுரு தான். பேதுருவிற்கு திருமணம் ஆகியிருந்ததால், அவருடைய குழந்தையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்வர். குழந்தைகளிடத்திலே இருக்கக்கூடிய பல குணங்கள், பெரியவர்களிடத்தில் இருந்தால், நிச்சயம் இந்த உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. புதிதானவற்றைப் பார்க்கிறபோது, அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், எது நடந்தாலும், தங்களுக்கு எதிராக எவர் தீங்கிழைத்தாலும், அதை உடனடியாக...