† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம். திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத்...

THE ADDICTION TO SELF

“Jesus said to all: ‘Whoever wishes to be My follower must deny his very self, take up his cross each day, and follow in My steps.’ ” –Luke 9:23 Mass Readings: February 15 First: Deuteronomy 30:15-20; Resp: Psalm 1:1-4,6; Gospel: Luke 9:22-25 Listen to the Mass Readings Because of our fallen human nature, we are addicted to self. By nature, we constantly think about ourselves and are so far out of touch with reality that we automatically think of ourselves as the center of the universe. To free us from our addiction to self, God became a man. He was...

தன்னலம் துறந்து சிலுவையைச் சுமப்போம்

இயேசுவும் தான் மெசியா என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் மெசியா என்பதை ஏற்றுக்கொண்ட இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதை இன்றைய நற்செய்தியில் விளக்கிக்கூறுகிறார். வழக்கமாக போரை வழிநடத்திச்செல்கின்ற அரசர் பாதுகாப்பாகத்தான் இருப்பார். அரசரைப்பர்துகாப்பதற்காக படைவீரர்கள் தான் துன்பங்களைத்தாங்கிக்கொண்டு தங்கள் உயிரைத்தியாகம் செய்வர். இங்கேயோ மக்களைப்பாதுகாக்க, மெசியா துன்பப்படவேண்டும், தன் உயிரைத்தியாகம் செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை இயேசு தருகிறார். மேலும் தன்னைப்பின்செல்கிறவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழங்குமுறைகளையும் இயேசு விவிரிக்கிறார். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் 1. ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும், 2. நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. அதற்காக மற்றவர்களைப்பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க...

STIR THE LORD TO CONCERN (JL 2:18)

“Then the Lord was stirred to concern for His land and took pity on His people.” -–Joel 2:18 God is a God of mercy. Jesus has revealed that nothing causes more joy in heaven than a repentant sinner. The Lord apparently cannot resist a humble, contrite, repentant heart (Ps 51:19). Those of us who are parents are blessed to get a glimpse of the heart of God in this area. When my children have approached me truly sorry for what they have done wrong, my fatherly heart melts with love for them. If I want good things for my children,...

சாம்பல் புதன்

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது. இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறுத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச்...