† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 – 28 ”அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்” பொதுவாக, திருப்பாடல்கள் வேண்டுதல்களோடும், விண்ணப்பங்களோடும் தொடங்கும். இறுதியில் கடவுள் புகழ்ச்சியோடு முடிவடையும். ஆனால், இந்த திருப்பாடல் சற்று வித்தியாசமானது. புகழ்ச்சியோடு தொடங்குகிறது. வேண்டுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவடைகிறது. தாவீதோடு கடவுள் கொண்டிருந்த உடன்படிக்கையை இது நினைவுபடுத்துவதாக அமைகிறது. கடவுள் தாவீதோடு என்ன உடன்படிக்கையை ஏற்படுத்தினார்? 2சாமுவேல் 7 வது அதிகாரத்தில், கடவுள் தாவீதோடு செய்து கொண்ட உடன்படிக்கைப் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதில் தாவீதின் வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும் என்கிற வாக்குறுதி வழங்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையைக் கேட்டவுடன் நிச்சயம் தாவீது கடவுளின் அன்பை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருப்பார். ஏனென்றால், கடவுள் தாவீதை உயர்வான இடத்தில் வைத்திருந்தார். ஆடு மேய்க்கிற சாதாரண இடையனை, இஸ்ரயேல் மக்களை வழிநடத்தக்கூடிய அளவுக்கு உயர்த்தியிருந்தார். ஆனால், தாவீதோ அந்த நன்றியுணர்வு இல்லாமல், தவறு செய்தான். கடவுளுக்கு...

CROSS-WORD

“I – once I am lifted up from earth – will draw all men to Myself.” –John 12:32 The Lord promised us a new covenant (Jer 31:31). Jesus called it the covenant in His blood (Mt 26:28). Jesus “became the Source of eternal salvation for all who obey Him” by learning “obedience from what He suffered” (Heb 5:9, 8). “Unless the grain of wheat falls to the earth and dies, it remains just a grain of wheat. But if it dies, it produces much fruit” (Jn 12:24). Once Jesus was lifted up on the cross, He began to draw all...

கோதுமை மணியின் மாட்சி …

தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கு இயேசு சொன்ன அருமையான போதனை கோதுமை மணி உவமை. கிரேக்கர்கள் அறிவுஜீவிகள். அவர்கள் ஞானத்தைத் தேடியவர்கள். எனவே, ஞானம் நிறைந்த இயேசுவின் போதனைகளையும், அருங்குறிகளையும் கேள்விப்பட்டு அவரைக் காணவந்தார்கள். அவர்களுடைய அறிவாற்றலுக்கு ஏற்றவகையில் இயேசு அவர்களிடம் உரையாடுகிறார். கிரேக்கர்களுக்குத் தோல்வி, துன்பம் இவற்றில் நம்பிக்கை இல்லை. துன்பத்தின் வழியாக இன்பமும், வெற்றியும் கிடைக்கும் என்பதெல்லாம் அவர்களின் அறிவாற்றலுக்கு ஒவ்வாத செய்திகள். எனவேதான், ஞானத்தை நாடும் கிரேக்கருக்கு சிலுவை மடமையாய் இருக்கிறது என்றார் பவுலடியார். பவுலைப் பொறுத்தவரையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து “கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார்” (1 கொரி 1: 22-24). அந்த ஞானத்தைத்தான் தம்மைத் தேடிவந்த கிரேக்கர்களுக்கும், அவர்களோடு நின்றுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் இயேசு கற்றுக்கொடுக்க முன்வந்தார். “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம்...

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்

இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம் நாம் அடைக்கலம் புகுவதுதான், நமக்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் என்று, திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடளிடம் தஞ்சம் கொள்வதே நமக்கு நலம் என்பது திருப்பாடல் ஆசிரியரின் கருத்து மற்றும் வாழ்க்கைப்பாடம். கடவுளிடம் ஏன் நாம் அடைக்கலம் புக வேண்டும்? ஏனென்றால், கடவுள் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார். கடவுள் தான் நம்மைப்படைத்தவர். கடவுள் தான், நமக்கு வழிகாட்டியாக இருக்கிறவர். நமக்கு வாழ்க்கைநெறிகளை வகுத்துத்தருகிறவர்....

THE 14-DAY WAR

“Yet I, like a trusting lamb led to slaughter, had not realized that they were hatching plots against me.” –Jeremiah 11:19 Mass Readings: March 17 First: Jeremiah 11:18-20; Resp: Psalm 7:2-3,9-12; Gospel: John 7:40-53 Listen to the Mass Readings Two weeks from today is Holy Saturday and Easter Vigil. Spiritual warfare may well intensify as we near the time to renew our baptismal promises. This renewal is the culmination of Lent and the center of the year. Because of this renewal’s strategic importance, the devil rages as we prepare to reject him, all his works, and all his empty promises....