† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நம்பிக்கை வழியாக இறையாசீர் பெறுவோம்

இன்றைய நற்செய்தியில் பல ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார். யூதர்களுடைய பார்வையில் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட நோய் கொடுமையானது மற்றும் அவமானத்துக்குரியது. மக்கள் மத்தியில் அது அருவருக்கத்தக்க நோயாகக் கருதப்பட்டது. நிச்சயம் அந்தப்பெண் தாழ்வு மனப்பான்மையோடு இருந்திருக்க வேண்டும். லேவியர் 15: 25 – 27 ல் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட சட்டம் விளக்கப்படுகிறது. “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்….”. ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது. அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவள் வந்ததே யாருக்கும் தெரிந்திருந்தால்,...

ENOUGH

“My grace is enough for you.” –2 Corinthians 12:9 Alleluia! Every Sunday is Resurrection day, the weekly celebration of that first Easter morning when Jesus rose from the tomb, triumphed over sin and death, and made all things new for us. Today is a day of unity, when believers from all over this earth gather to worship almighty God, listen to His living, all-powerful Word, and receive the Bread of Life, Jesus Himself. Today we learn again that God loves us so much that He can never give us enough of His blessings. Alleluia! How wonderful is God’s plan for...

இறைவாக்குப் பணி

எசேக்கியேல் 2: 2 – 5 இறைவாக்கினர் எசேக்கியேல், கடினமான நேரத்தில் இறைவாக்குப் பணியைச் செய்ய இறைவனால் அனுப்பப்படுகிறார். கி.மு.597 ம் ஆண்டு, பாபிலோனியர்கள் யூதாவை முற்றுகையிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் பாபிலோனியர்களிடம் யூதர்கள் சரணடைகிறார்கள். யூதர்களுக்கு மிகப்பெரிய கப்பத்தொகையை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டியதிருக்கிறது. செதேக்கியாவை யூதர்களின் அரசனாகவும், தங்களின் கைப்பொம்மையாகவும் பாபிலோனியர்கள் நியமனம் செய்கிறார்கள். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின், செதேக்கியா பாபிலோனியர்களுக்கு எதிராக நிற்பதற்கு தயாராகுகிறார். எகிப்தியர்களுடன் சேர்ந்து கொண்டு, பாபிலோனியர்களை எதிர்க்கத் துணிகிறார். இது நெபுகத்நேசருக்கு கோபத்தைத் தூண்டுகிறது. கி.மு.587 ம் ஆண்டு, மீண்டும் எருசலேம் நகருக்கு படையெடுத்து வந்து, அவர்களை சின்னாபின்னமாக்குகிறார். எருசலேமை தரைமட்டமாக்குகிறார். இருக்கிற செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார். மீண்டும் தன்னுடைய கைப்பொம்மையாக அரசரை நியமிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. எனவே, அனைவரையும் நாடுகடத்துகிறார். இஸ்ரயேல் என்கிற நாடு இல்லாமல் போகச் செய்கிறார். இப்படிப்பட்ட மோசமான, துயரமான நேரத்தில் இறைவாக்கினர் எசேக்கியேல் இறைவாக்குப் பணியைச்...

THE RUINS

“I will wall up its breaches, raise up its ruins, and rebuild it as in the days of old.” –Amos 9:11 In our culture of death, many people and things are in ruins. Marriages, families, ministries, neighborhoods, cities, finances, and whole lives are in ruins. Humanly, it is impossible to raise up these ruins. However, “nothing is impossible with God” (Lk 1:37). In fact, the Lord promises that He will raise up even the ancient ruins – lives and things that have been ruined for so long that hardly anyone even thinks of their restoration. Yet the Lord promises: “They...

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

“அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின் நாள் வரும் வேளையில், அங்கு வளமையும்...