† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆவலோடு எதிர்பார்த்தது இதோ விரைவில்…

லூக்கா 21:20-28 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது கிடைக்கும் போது நமக்கு பெருமகிழ்ச்சி கிட்டுகிறது. நாம் எதிர்பார்த்திருந்தன் நோக்கமும் நிறைவு பெறுகிறது. நமது மனதின் ஏக்கமும் முடிவுக்கு வருகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவார் என எதிர்பார்த்திருக்கும் நமக்கு மிக உடனடியாக அவரது இரண்டாம் வருகை இருக்கும், நம் ஏக்கம் நிறைவேற போகிறது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் இரண்டாம் வருகை நமக்கு இரண்டு ஆசீரைத் தருகிறது. 1. மீட்பு இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பியிருக்கும் எல்லோருக்கும் இயேசுவின் வருகை மீட்பு அளிக்கும். அந்த மீட்பிற்கான நாள் வெகுதொலையில் இல்லை. மாறாக மிகவும் அருகில் உள்ளது. நாம் அனைவரும் மெசியாவைப் பார்க்க...

WHITE MARTYRDOM

“You will be brought to give witness.” –Luke 21:13 Throughout the history of the Church numerous martyrs have testified in their court trials that they were Christians, that they feared none but God alone, and that they preferred to die rather than renounce their Lord and Savior Jesus Christ. Most of us will not have to testify before rulers and powers intent on forcing us to deny Jesus or die. Some of you may be required to do so; may you be inspired by the words of Jesus in today’s Gospel reading. Nonetheless, most of us are put on trial...

நன்மைக்கு அமோக வெற்றி!

லூக்கா 21:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்....

END TIMING

“Now is the time to reap.” –Revelation 14:15 At the end, Jesus, the King of kings (Rv 17:14), will come riding on a white cloud with a gold crown on His head and a sharp sickle in His hand (Rv 14:14). He will gather the harvest of justice (Rv 14:16). Then an angel will come from the temple in heaven. He will also wield a sharp sickle to gather the grapes of wrath (Rv 14:19). We will all be harvested, either by our loving Lord or by the “grim reaper.” “When will this be, Teacher? And what will be the...

இறைவன் விடுக்கும் எச்சரிக்கை

திருவெளிப்பாடு 14: 14 – 20 ”உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். ஏனெனில், அறுவடைக் காலம் வந்துவிட்டது. மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று, வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின் மீது வீற்றிருந்தவரை நோக்கிக் கூறுகிறார். இந்த காட்சி, உலக முடிவைப் பற்றி எடுத்துரைக்கிறது. திருவழிபாட்டின் கடைசி வாரத்தில் இருக்கிற நமக்கு, வாழ்வைப் பற்றிய பயத்தை அல்ல, மாறாக, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை வரவேற்பதற்கான ஆயத்தமாக, இந்த வாசகம் நமக்கு தரப்படுகிறது. விவிலியத்தில், இயேசு எப்போதும் கடவுளை இரக்கமுள்ளவராக அறிமுகப்படுத்துகிறார். கடவுள் நல்லவர், இரக்கமுள்ளவர் என்கிற செய்தி, விவிலியம் முழுமைக்குமாக ஆங்காங்கே காணப்படுகிறது. இன்றைக்கு பல் வியாபாரத்திற்காக கடவுளை, கொடுமையானவராக சித்தரிக்கிறார்கள். மக்களை பயமுறுத்தி, அதன் மூலமாக இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் செய்கிறபோது, பயம் நிச்சயமாக இருக்க வேண்டும். அதேவேளையில், கடவுளின் இரக்கத்தின் மீதும் ஒருவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். யூதாசைப் போல கடவுளின் இரக்கத்தில்...