† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நற்பேறு பெற்றவர் யார்?

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4, 6 நற்பேறு பெற்றவர் யார்? என்கிற கேள்வியோடு தொடங்குகிறது இன்றைய திருப்பாடல். நற்பேறு என்கிற வார்த்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. உள்ளத்தின் நிறைவை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நாம் எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிற வார்த்தை. இந்த உலகத்தில் வாழும் அனைவருமே மகிழ்ச்சியான வாழ்விற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தான் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அத்தகைய மகிழ்ச்சியான வாழ்விற்கு அழைப்பு விடுப்பதுதான் இந்த திருப்பாடல். பொல்லாரின் சொல்லோ, வாழ்வோ நம்மை நெருங்காதபடிக்கு பார்த்துக்கொண்டால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்வாக அமைந்துவிடும் என்பதுதான், ஆசிரியரின் தீர்வாக இருக்கிறது. இன்றைக்கு பொல்லாரைத் தேடி சிறைக்கே செல்லக்கூடிய கேவலமான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொல்லார் என்று தெரிந்திருந்தும், சுயநலத்திற்காக, சுயஇலாபத்திற்காக, மானத்தை விட்டு, வெட்கத்தை விற்று, வாழ்வை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே காற்று...

MINED-FIELDS

“John said to Him, ‘Teacher, we saw a man using Your name to expel demons.’ ” –Mark 9:38 Because of past wars, large areas of several countries are still land-mined. These mines cause devastating injuries and death even years after a war is over. Jesus’ war on earth with the devil is over. “It was to destroy the devil’s works that the Son of God revealed Himself” (1 Jn 3:8). Jesus is totally victorious. He “took His seat forever at the right hand of God; now He waits until His enemies are placed beneath His feet” (Heb 10:12-13). The war...

எங்கும்! எல்லோரிடமும்!

மாற்கு 9 :38 – 40 எவனொருவன் நல்ல மனிதனாக வாழ்கிறானோ அவன் இயேசுவின் பெயராலேயே அனைத்தையும் செய்கிறான். அவன் அவரின் பெயரை வேணுமென்றால் பயன்படுத்தலாம். பயன்படுத்தாமலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இயேசுவின் மதிப்பீடுகளை, விழுமியங்களை விட்டுக் கொண்டு ஒருவரால் நல்ல மனிதனாக வாழமுடியாது. இவ்வுலகில் யாரெல்லாம் நல்லதை எண்ணுகிறார்களோ, செய்கிறார்களோ அவர்களோடு நாமும் இணைய வேண்டும். இந்த இணைதலுக்கு சாதி, மதம், இனம் மற்றும் வேறு எந்த வேறுபாடுகளுமே தடையாக இருக்க முடியாது. இதனைத்தான் புகழ்பெற்ற இறையியலாளர் கார்ல் ரானர் ‘அறியப்படாத கிறித்தவர்கள்’ (Anonymous Christians) என்கிறார். கிறித்துவை ஏட்டளவில் அறிந்து அவரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது மனசாட்சியின் படி நல்லது செய்பவர் அவரது அருகில் நெருக்கமாகவே இருக்கிறார். திருமுழுக்குப் பெற்று தினமும் திருப்பலி வந்தவர்களோடு மட்டுமல்லாது எவரெல்லாம் கிறித்தவ மதிப்பீடுகளான அன்பு, நீதி, மன்னிப்பு….. என்று வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரோடு கிறித்து உயிரோடு இருந்து இயக்கிக் கொண்டுதான்...

“WILL HE FIND FAITH?” (SEE LK 18:8)

“What an unbelieving lot you are!” –Mark 9:19 Sometimes the Lord does things in our lives whether or not we have faith. Often, however, the Lord wants us to make a free decision to accept His grace. We express our freedom by faith. For example, Jesus told the father of a demon-possessed son: “Everything is possible for anyone who has faith” (Mk 9:23, JB). The father realized that Jesus was calling him to have faith. So he exclaimed: “I do have faith! Help the little faith I have!” (Mk 9:24, JB) In that situation, Jesus called not only the father...

நம்பிக்கையை அதிகமாக்கும்….

மாற்கு 9 : 14 – 21 இன்றைய நற்செய்தி நம் இறைநம்பிக்கைக்கு வலுவூட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இச்சிறுவனைப் பிடித்துள்ள பேய் ஆற்றல் உள்ளது. அது அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் நுரை தள்ளிப் பல்லைக் கடிக்கிறான். அவனது உடலும் விறைத்துப் போகின்றது. இப்பேயின் ஆற்றலின் முன் சீடர்களின் ஆற்றல் குறைவாகவே இருக்கின்றது. இக்குறைவிற்கு காரணம் என்ன? என்றும், இந்த சிறுவனை எப்படி நிறைவாக்க முடியும்? என்றும் ஆண்டவர் இயேசு தெளிவுபடுத்துகிறார். இன்றைய சீடர்களாகிய நமக்கு இது எப்படி முக்கியம் என்றால் நாம் பிறருக்கு பிடித்திருக்கின்ற தீய சக்திகளை விரட்டுவதைக் காட்டிலும் நம்மிடம் நம்மைச் சார்ந்து இருக்கின்ற தீய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். “என்னிடம் நம்பிக்கைக் கொள்வோர் என்னைவிடப் பெரிய காரியங்களைச் செய்வார்” ( யோவான் 14:12) என்ற இறை வார்த்தையை முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கை என்பது, ‘என்னால் இயலாது, இறைவா’ உம்மால் மட்டுமே எல்லாம் இயலும் என்று அவரது...