† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது. ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை, அதை வாழ்பவர்கள் மட்டுமே...

LORD, I DON’T GET IT

” ‘Philip,’ Jesus replied, ‘after I have been with you all this time, you still do not know Me?’ ” —John 14:9 St. Philip asked Jesus a question to which Jesus clearly expected Philip to already know the answer. Unfortunately, I can relate all too well to St. Philip, and perhaps some of you can relate as well. Often I must hear information several times before it finally sinks into my mind. Thankfully, Philip was not too proud to offer Jesus his ignorance and lack of understanding. Philip allowed Jesus to take it away and replace it with the Holy...

நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14 ஒருவரின் உள்ளத்தில் கவலையும் கலக்கமும் எழுகிறபோது, பலவிதமான கேள்விகள் உள்ளத்தில் தோன்றுகிறது. கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் இவ்வளவு கவலைகள் நமது வாழ்க்கையில் வருமா? இந்த கேள்விகள் எல்லாருக்கும் தோன்றாது. மாறாக, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய ஒரு சிலருடைய வாழ்வில் நிச்சயம் இது தோன்றும். இந்த கேள்விகள் எழக்கூடிய தருணங்கள் கடினமான, கடுமையான தருணங்கள். காரணம், நம்பிக்கை இழக்கக்கூடிய தருணங்களில் மற்றவர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால், அது கடவுள் நம்பிக்கையோ சீர்குலைத்துவிடும். இப்படிப்பட்ட மோசமான தருணத்தில் தான், திருப்பாடல் ஆசிரியரும் இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் தோன்றுகிறது. அவைகளுக்கு அவரால் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வது? எப்படி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது என்கிற ஏக்கம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அவர், ”காத்திரு” என்கிற பதிலை கண்டுபிடிக்கிறார். தன்னுடைய உள்ளத்தை...

THERE’S SOMETHING ABOUT THAT NAME

“Better for us to obey God than men! The God of our fathers has raised up Jesus.” —Acts 5:29 Jesus of Nazareth died for our salvation and rose from the dead. After He poured out the Holy Spirit, people began to realize His name was above every other name. At His name, every knee must bend and every tongue proclaim that Jesus is Lord (Phil 2:10-11). The Spirit inspired the apostles to teach about Jesus’ name and fill Jerusalem with it (Acts 5:28). Nonetheless, the authorities gave “strict orders not to teach” about Jesus’ name (Acts 5:28). The apostles defied...

நான் தந்தையுள்ளும் தந்தை என்னுள்ளும்

(யோவான் 3 : 31-36) நற்செய்தியாளர் யோவான் திருமுழுக்கு யோவானின் சீடராவார் என விவிலிய அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் திருமுழுக்கு யோவானைப் பற்றிய பல நெருங்கிய குறிப்புகளை யோவான் நற்செய்தியில் அதிகமாகக் காணமுடிகின்றது. உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியை குருவே தமது சீடர்க்கு அறிமுகம் செய்து வைக்கிறார். இடியின் மகன் என்று அழைக்கப்படும் யோவான் இதனாலேயே இறைமகன் என்ற உண்மையைத் திருமுழுக்கு யோவான் வாயிலாக வலியுறுத்துகிறார். கூடவே இருந்து அறிந்ததால்தான் தனது நற்செய்தியின் தொடக்கத்திலேயே இயேசுவை விண்ணக மகனாக நமக்கு எழுதுகிறார். “தொடக்கத்தில் வாக்கு இருந்தது, அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” என்ற மறையுரைக்குச் சான்று பகர்கிறார் திருமுழுக்கு யோவான். “ மேலிருந்து வருபவர் அனைவருக்கும் மேலானவர், தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார் (3:32) நாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவரைப்பற்றி நெருக்கமாக அறிந்தவரிடம் விசாரிப்போம். ஓர் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள...