† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

என் கை எப்போதும் அவனோடு இருக்கும்

திருப்பாடல் 89: 1 – 2, 20 – 21, 24 & 26 ”கை” என்பது ஒருவரின் துணையைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், நம்மை முழுமையாக அன்பு செய்யக்கூடியவர்கள், நமது துணையாளர்களாக இருக்கிறார்கள். இங்கே கடவுள் தன்னுடைய ஊழியருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். கடவுள் தன்னுடைய பணிக்காக பல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அவர்களில் சிலர் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். பலர், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை? என்று ஒதுங்கிச் செல்கிறார்கள். அவர்கள் ஒதுங்கிச் செல்வதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. கடவுளின் பணியைச் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல.அந்த பணியைச் செய்கிறபோது, பலவிதமான சோதனைகள், இன்னல்கள், இடையூறுகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே தான், பலர் அதனை விரும்புவதில்லை. கடவுளின் பணி என்று சொல்கிறபோது, குருக்களும், துறவறத்தாரும் மட்டுமல்ல, பொதுநிலையினரும் இந்த பணியைச் செய்ய கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பணிவாழ்வில், கடவுளின் கரம்,...

HOME RUN

“Barnabas and Saul…sent forth by the Holy Spirit…set sail from there for Cyprus.” —Acts 13:2, 4 Barnabas was likely the leader for the Church’s first missionary trip, as indicated by the fact that his name came before Saul’s. Of all the possible destinations in a world without the Lord, the Holy Spirit sent Barnabas home, to Cyprus (Acts 13:4). Remember that Barnabas came “from Cyprus” (Acts 4:36). After evangelizing Cyprus, Barnabas and Saul evangelized numerous cities. Thus, with home serving as a launching pad, “the word of the Lord continued to spread and increase” (Acts 12:24). Jesus once delivered a...

கடவுளே! எம்மீது இரங்கி, ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 & 7 கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு, அவரது இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு எதற்கு இரக்கம் தேவைப்படுகிறது? இரக்கத்திற்கும், ஆசீர்வாதத்திற்கும் என்ன தொடர்பு? கடவுளின் ஆசீரைப் பெற வேண்டுமென்றால், கடவுளின் இரக்கத்தைக் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். ஆசீர்வாதம் என்பது புனிதத்தன்மை நிறைந்தது. கடவுளிடமிருந்து வருவது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, மனிதர்களாகிய நாம் தகுதியற்றவர்கள். கடவுளின் இரக்கம் நம்மோடு இருக்கிறபோது மட்டும் தான், அவரது அருளை நாம் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி,...

“GIVE ME A DRINK” (JN 4:7)

“My soul longs for You, O God. Athirst is my soul for God, the living God.” —Psalm 42:2-3 The homilist at today’s Mass related a story from his visit to Rome. The huge baptistry at the Lateran Basilica features a large statue of a deer, bent toward the Baptismal font, longing for a drink from the waters of Baptism (see Ps 42:2ff). In their own way, the deer, and all God’s creatures, are thirsty for God’s living waters. Jesus is also thirsty. From the cross, He groans: “I am thirsty” (see Jn 19:28). To the Samaritan woman, and to each...

இறைவனின் பார்வை

திருத்தூதர் பணி 11: 1 – 18 மனிதர்களின் பார்வையும், கடவுளின் எண்ணங்களும் எந்த அளவிற்கு வேறுபாடானதாக இருக்கிறது என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. பேதுரு ஒரு யூதர். அவருடைய பார்வை யூதப்பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது. அந்த பாரம்பரியத்தின் பார்வையில் தான், எது தவறு? எது சரி? என்று அவர் முடிவெடுக்கிறார். யூதர்களுக்கு தங்களது இனம் தான் தூயது என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. பேதுருவும் அந்த சிந்தனையில் தான் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், அவர் வேறு இனத்தவரோடு, அதாவது விருத்தசேதனம் செய்யாத இனத்தவரோடு உணவு உண்டது, மற்றவர்களுக்கு இடறலாக இருப்பதாக, அவரிடத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான பதிலாக, தான் கண்ட காட்சியை பேதுரு வெளிப்படுத்துகிறார். ஒருவர் எந்த இனத்திலிருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவர் பெற்றிருக்கிற விசுவாசம் தான், அவரை கிறிஸ்துவுக்குள் இருக்கிறவராக காட்டுகிறது. உண்மையான கிறிஸ்தவர் என்பது, நாம் சார்ந்திருக்கிற இனத்தின் மூலமாக அல்ல, மாறாக, நாம்...