† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தூய ஆவியானவரின் வழிநடத்துதல்

திருத்தூதர்பணி 20: 28 – 38 எபேசு நகரிலிருந்து, மிலேத்துவிற்கு மூப்பர்களை அழைத்த பவுல், அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். அங்கிருந்து தான், எருசலேம் செல்லவிருப்பதாகவும், இனிமேல் அவர்களை காண மாட்டேன் எனவும் சொல்கிறார். பவுலின் இந்த வார்த்தைகளை இயேசுவின் வார்த்தைகளோடு நாம் இணைத்துப் பார்க்கலாம். எருசலேம் செல்வது என்பது, இயேசுவுக்கு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும். எருசலேம் பயணம் எப்படி அமையப்போகிறது என்பது இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதுதான், தன்னுடைய கடைசி பயணம் என்று அறிந்திருந்தார். அறிந்திருந்தார் என்பதைவிட, தூய ஆவியானவர் அவருக்கு உணர்த்தியிருந்தார். கிட்டத்தட்ட அதே போல ஒரு சூழ்நிலைதான், பவுலடியாரின் வாழ்விலும் நடைபெறுகிறது. எருசலேமுக்கு செல்கிற தன்னுடைய பயணம் பாடுகளின் பயணம் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அவர் பலவிதமான பாடுகளை தாங்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். உணர்ந்திருந்தார் என்பதை விட, தூய ஆவியானவர் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இறைத்திட்டத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறபோது, தூய ஆவியானவர் நமக்கு...

SPIRITUAL RECYCLING

“The Holy Spirit has been warning me.” —Acts 20:23 We are halfway through the Pentecost Novena. By this time in the novena, the Holy Spirit has been quite active. The Holy Spirit has been working on preparing our hearts for Pentecost. The Spirit has been consoling us, instructing us (Jn 14:26), leading us to the truth (Jn 16:13), and warning us about repentance and other changes we must make (Acts 20:23). As the novena continues, the Spirit will be helping us pray, for we know not how to pray as we ought (Rm 8:26). The Spirit will fight against our...

பவுலடியாரின் இறைப்பற்று

திருத்தூதர்பணி 20: 17 – 27 பவுலடியார் எபேசு நகரத்தைச் சேர்ந்த திருச்சபையின் மூப்பர்களை வரவழைக்கிறார். மூப்பா்கள் என்பவர்கள் ஆன்மீகத் தலைவர்கள். எந்த ஒரு விவிலியப்பகுதியை வாசித்தாலும், எங்கே? ஏன்? எப்போது? யார்? என்ன? எப்படி? என, கேள்விகளை வைத்து, நாம் பதில் காண முயலுகின்றபோது, விவிலியம் நமக்கு சொல்ல வருகிற செய்தியை, ஓரளவு புரிந்து, கடவுள் நமக்கு சொல்கிற அறிவுரையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பகுதி பவுலின் மூன்றாவது திருத்தூதுரைக்கும் பயணத்தின் தொடக்கம் என்று சொல்லலாம் 18: 23 – 21: 16). திருத்தூதர் பவுல், அவருடன் இருந்தவர்கள் மற்றும் திருச்சபையின் மூப்பர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். இடம்: மிலேத். பவுல் எதற்காக எபேசு சென்று அவர்களை சந்திக்கவில்லை? எதற்காக அவர்களை மிலேத்துவிற்கு வரவழைக்கிறார்? 20: 16 தெளிவாகச் சொல்கிறது: பவுல் காலம் தாழ்த்த விரும்பாததால் எபேசுக்குப் போகாமலே, எருசலேமுக்குச் செல்லத் தீர்மானித்திருந்தார். முடியுமானால், பெந்தகோஸ்து நகரில் அங்கிருக்க வேண்டும் என்று...

GOD’S WORD OVERCOMES THE WORLD

“You will suffer in the world. But take courage! I have overcome the world.” —John 16:33 At the age of sixteen, after Christmas Mass, I found in the alcove of the Church a pamphlet called Through the Bible in One Year. It featured a daily checklist in which you could read several chapters of the Bible a day for an entire year. Each day, you checked the box when you finished the readings, and at the end of the year, you would have read the entire Bible. On the first day of 1973, I was excited to read several chapters...

நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்

திருப்பாடல் 68: 1 – 2, 3 – 4, 5 – 6 நேர்மையாளர்கள் யார்? அவர்கள் ஏன் மகிழ்ச்சியடைவார்கள்? நேர்மையாளர்கள் என்பவர்கள், கடவுளின் சட்ட திட்டங்களுக்கு தங்களையோ முழுமையாக ஒப்புக்கொடுத்து மன்றாடுகிறவர்கள். கீழ்ப்படிதலோடு வாழ்கிறவர்கள். தங்கள் மனச்சான்றுக்கு பயந்து வாழக்கூடியவர்கள். சுயநலத்தோடு எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். அவர்கள் எப்போதும் கடவுளுக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்திருக்கிறவர்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆசிரியர் சொல்கிறார். இந்த உலக வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது, மேலே சொல்லப்பட்டிருக்கிற விழுமியங்களோடு ஒரு மனிதர் வாழ்ந்தால், அவர் நிச்சயம் கவலைகொள்வதற்குத்தான் அதிகமான காரணங்கள் நமக்குக் கிடைக்கிறது. பின்னர் எப்படி நோ்மையாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அநீதி இந்த உலகத்தில் இருந்தாலும், அதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு அநீதி செய்கிறவர்களால், தொடர்ந்து அநீதியோடு வாழ முடியாது. அவர்களுக்கும் ஒரு முடிவு வரும். அதுதான் இந்த திருப்பாடலில் வெளிப்படுகிறது. அநீதி செய்கிறவர்கள்...