† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வாக்குறுதி மாறாத கடவுள்

கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது. ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை...

THE MIND OF CHRIST (1 COR 2:16)

m of heaven. Instead of spending our lives worrying about paying the bills, we focus on allowing God to provide for our genuine needs while we are occupied with doing His will and leading people into a new life in Christ. God knows everything we need before we ask Him (Mt 6:32). He is not stingy, but exceedingly generous. He is just, and though He demands that we bear fruit for His kingdom, He will not fail to provide for and bless those who spend their lives working for His sake (see Heb 6:10). Therefore, set your mind on heaven,...

இறைவன் தன் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்

திருப்பாடல் 85: 8, 10 – 11, 12 – 13 இறைவன் தன்னுடைய மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிப்பதாக ஆசிரியர் கூறுகிறார். நிறைவாழ்வு என்பது என்ன? நிறைவாழ்வை இறைவன் வாக்களிக்கக்கூடிய அளவிற்கு அது சிறந்ததா? நிறைவாழ்வு என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கக்கூடிய அர்த்தம். இந்த நிறைவான வாழ்வு எதிலிருந்து கிடைக்கிறது? நிறைவாழ்வு என்பது ஒரு பொருளல்ல. அது ஒரு நிலை. ஆன்மாவின் மகிழ்வு தான் நிறைவாழ்வு. இந்த ஆன்மாவின் மகிழ்வு வெறும் பொருளைச் சேர்ப்பதிலோ, அதிகாரத்தைப் பெறுவதிலோ இல்லை. மாறாக, அதனையும் கடந்த மதிப்பீடுகளிலும், விழுமியங்களிலும் காணப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இன்றைக்கு பணம் சேர்க்க வேண்டும் என்கிற ஆவல் கொண்டிருக்கிறோம். அந்த பணம் நிறைவைத்தரும், நிறைவாழ்வைத் தரும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோம். ஆனால், பணத்தை முழுவதுமாக சேர்த்து வைத்த பின்னர், அந்த நிறைவைப்பெற்ற உணர்வு இல்லை. அப்போதுதான், நிறைவு என்பது பணத்திலிருந்தோ, பொருளிலிருந்தோ கிடைக்கக்கூடியது அல்ல என்பதை உணர ஆரம்பிக்கிறோம். ஆக,...

SLIDE RULE

“They became defiled by their works, and wanton in their crimes.” —Psalm 106:39 “The Israelites offended the Lord” (Jgs 2:11). They persisted in sin and eventually began to receive the wages of sin (Rm 6:23). The Lord “allowed them to fall into the power of their enemies round about whom they were no longer able to withstand. Whatever they undertook, the Lord turned into disaster for them” (Jgs 2:14-15). In their affliction, the people cried out to the Lord, and He took pity on them by sending the “judges” to lead them to repentance. However, the people did not completely...

உம் மக்கள் மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூறும்

திருப்பாடல் 106: 34 – 35, 36 – 37, 39 – 40, 43 கடவுளிடத்தில் செபிக்கிற மன்றாட்டுக்களில் இரண்டு விதமான மன்றாட்டுக்கள் இருக்கிறது. நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள், நிர்பந்தமுள்ள மன்றாட்டுக்கள். நிர்பந்தமில்லாத மன்றாட்டுக்கள் என்பது, கடவுளுக்கு பிரியமானால், இது நடக்கட்டும் என்கிற ஆழமான விசுவாசத்தில் வேரூன்றிய மன்றாட்டு. இப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறவர்கள் மிகவும் குறைவு. அப்படி செபிப்பதற்கு நமக்கு நிறைய ஆன்மீக பலம் வேண்டும். புனிதர்களின் செபங்கள் இப்படிப்பட்ட செபங்கள் தான். நிர்பந்தமான மன்றாட்டு என்பதில் இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கலாம். ஒன்று தாழ்ச்சியுடன் கூடிய நிர்பந்தம், இரண்டாவது அதிகாரம் நிறைந்த நிர்பந்தம். இன்றைய திருப்பாடலில் வருகிற இந்த பாடல், தாழ்சியுடன் கூடிய நிர்பந்தமான மன்றாட்டாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தவறு செய்திருக்கிறார். அந்த தவறுக்காக ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேவேளையில் கடவுளிடத்தில் தான் கேட்பதற்கு தகுதியற்றவனாக உணர்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுளுக்கு எதிராக நன்றியுணர்வு இல்லாமல் பாவங்கள்...