† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்

திருப்படல் 145: 1 – 2, 8 – 9, 10 – 11 ”அனுபவமே சிறந்த ஆசான்” என்று பொதுவாகச் சொல்வார்கள். திருப்பாடல் ஆசிரியரின் இந்த வரிகள், அவருடைய அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அறியாததை, தெரியாததை கற்றுக்கொடுப்பது தான் அனுபவம். இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று அனுமானத்தின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அனுமானத்தை உறுதிப்படுத்துவதுதான் அனுபவம். திருப்பாடல் ஆசிரியருடைய அனுபவம் என்ன? அவருடைய அனுபவத்திற்கும், இன்றைய திருப்பாடலுக்கும் என்ன தொடர்பு? ”ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்வார்” என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவம். அவருடைய அனுமானம் இதுவரை, கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமே என்பதாக இருந்திருக்கிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையில் தான், அவரும் வாழ்ந்திருக்கிறார். ஏனென்றால், இஸ்ரயேல் கடவுளின் விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்று அவருடைய முன்னோர்கள் வழியாக கேள்விப்பட்டிருக்கிறார். அந்த நம்பிக்கையோடு தான், அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவருடைய அனுமானம் சரியானதல்ல...

EASY CHAIR

“On another sabbath He came to teach in a synagogue where there was a man whose right hand was withered.” —Luke 6:6 “The scribes and Pharisees were on the watch to see if He would perform a cure on the sabbath so that they could find a charge against Him” (Lk 6:7). They assumed Jesus would have to work to heal the man with the withered hand and thereby violate the sabbath. Jesus healed the man, but without working. All He did was speak, and all the man did was stand and stretch out his hand (Lk 6:10). Thus although...

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன

திருப்பாடல் 62: 5 – 6, 8 இந்த திருப்பாடல் செபமாகவோ, புகழ்ச்சிபாடலாகவோ இருக்கலாம். அது உறுதியாகத் தெரியவில்லை. எந்த சூழலில் எழுதப்பட்டது என்பதும் உறுதியாகவில்லை. சோகமான சூழலிலா? அல்லது மகிழ்ச்சியான வேளையா? என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுள் மீது வைத்திருக்கிற நம்பிக்கை மட்டும் இங்கே அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது. ”எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்” என்று, ஆசிரியர் விடுக்கிற அழைப்பு இதனை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுளின் அருளும், வல்லமையும் நம் வாழ்வில் வெளிப்பட நாம் காத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார் திருப்பாடல் ஆசிரியர். நாம் எதிர்பார்க்கிற நேரத்தில் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மாறாக, கடவுள் விரும்புகிற நேரத்தில், அதிலும் சிறப்பாக நமக்குத் தேவையான நேரத்தில் கடவுளின் வல்லமை வெளிப்படும். இதுதான் கடவுள் மட்டில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த நம்பிக்கையிலிருந்து நாம் சிறிதும் அடிபிறழக்கூடாது. அந்த நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அதுதான் ஆசிரியர்...

THE CONSEQUENCES OF LUKEWARM CHRISTIANITY

“If one of you decides to build a tower, will he not first sit down and calculate the outlay to see if he has enough money to complete the project?” —Luke 14:28 To be disciples of Christ, we must make the radical decision of totally giving ourselves to the Lord. If we decide to do anything less, our Christian lives will be unfinished, and we will be ridiculed and defeated (Lk 14:29ff). Some Christians in the USA have not made a total commitment to Christ. So they, especially Catholic Christians, are repeatedly portrayed as fools by the media. Moreover, one...

கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்

”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள்,...