† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆண்டவரின் அனைத்துச் செயல்களே! நீங்கள் கடவுளை வாழ்த்துங்கள்

தானியேல் 1: 34, 35 – 6, 37 – 38 நெருப்பு மூன்று இளைஞர்களை தீண்டாது இருந்தபோது, கடவுளின் வல்லமையை அனுபவித்த அவர்களின் நன்றிப்பெருக்கு தான், இன்றைய நாளின் பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் செய்த செயல்கள் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை, அந்த மூன்று இளைஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள். இது சற்று வித்தியாசமானதாக இருப்பதை நாம் உணரலாம். படைப்புக்களை கடவுளைப் போற்றச் சொல்லி அழைப்புவிடுப்பதைப் பார்த்திருக்கிறோம், இறைவனின் அருளை உணர்ந்த மனிதர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இறைவனது செயல்களை கடவுளைப் போற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு புதுமையானது. அடுக்கடுக்கான வார்த்தைகளைப் பேசி மக்களை கவர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பேச்சு மட்டும் தான், அவர்களின் மூலதனம். தங்களுடைய பேச்சுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வாயில் என்ன வருகிறதோ, அதை அப்படியே பேசிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் மதிப்பதும் கிடையாது. ஒரு...

THE SECRET OF THE GREATEST GREATNESS

“In any question of wisdom or prudence which the king put to them, he found them ten times better than all the magicians and enchanters in his kingdom.” —Daniel 1:20 Daniel, Hananiah, Mishael, and Azariah were “ten times better” than the best of Babylon. It is one thing to be ten times greater than the average or the good. However, it’s astounding to be ten times greater than the “all-star team.” What was the secret to exceptional greatness for the four Jewish young men? They were obedient to the Jewish kosher food laws, and this was only an example of...

என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்

தானியேல்(இ) 1: 29அ,இ, 30 – 31, 32 – 33 சாத்ராக்கு, மேசாக்கு, ஆபெத்நெகோ கடவுளைத் தவிர வேறு எவரையும் வழிபட மாட்டோம் என்று சொன்னதால், நெபுகத்நேசர் அரசரால் தீச்சூளையில் தள்ளப்பட்டனர். மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின், சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச்சூளையில் போட்டு தீ வளர்த்த வண்ணம் இருந்தனர். இதனால், தீப்பிழம்பு சூளைக்கு மேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று. அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த பாபிலோனியரைச் சுட்டு எறித்தது. ஆனால், இளைஞர்கள் காவல்தூதர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக இருந்தனர். இக்கட்டான நேரத்தில் தங்களைக் காப்பாற்ற தூதர்களை அனுப்பிய இறைவனை அவர்கள் இணைந்து போற்றுவதுதான் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இறைவனை மூதாதையரின் கடவுளாக இளைஞர்கள் வாழ்த்துகிறார்கள். இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் செய்து வந்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் இஸ்ரயேலின் பிள்ளைகள் அனைவருக்கும் அவர்களுடைய மூதாதையர் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இஸ்ரயேலின் முதுபெரும் தந்தையர்கள் கடவுளையும்,...

THE PROBLEM WITH THE KING

“There was an inscription over His head: ‘THIS IS THE KING OF THE JEWS.’ ” —Luke 23:38 When we acknowledge that Jesus is our King, we imply that we are His subjects. It is so difficult for us to be subjects, for when we pray “Thy kingdom come,” that means His will, not ours, is to be done (see Mt 6:10). When we enthrone Jesus as our King, we must necessarily dethrone ourselves. It is even more challenging for a citizen of the USA to be a subject. Our country is founded on the rejection of subjection to the King...

கிறிஸ்தரசர் பெருவிழா

இயேசு கிறிஸ்து – அனைத்துலகின் அரசர் அரசர் என்பவர் யார்? ஓர் அரசர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி ஆள வேண்டும்? எப்படி தனது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இயேசு சிறந்த உதாரணம். இந்த உலகம் ஏற்றுக்கொள்வது போன்ற அரசர் இயேசு அல்ல. காரணம், அவர் அரசரின் வாரிசு அல்ல. தச்சரின் மகன். போரில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியவரும் அல்ல. ஆனால், மக்கள் அனைவரின் மனதிலும் குடிகொண்டு, குறிப்பாக, ஏழை, எளியவர்கள் நடுவில் தன்னை முழுமையாக ஒப்படைத்த ஒப்பற்ற அரசர். அவர்கள் வாழ்வை உயர்த்துவதற்காக முழுமையாக அர்ப்பணித்தவர். ஒருவர் நல்ல நிலையில் இருக்கிறபோது, மற்றவருக்கு உதவி செய்ய மனமிருக்கலாம். அப்படி இருப்பவர்கள் கூட இன்றைக்கு அரிதாகி விட்டார்கள். ஆனால், துன்பத்தில் இருக்கிறதுபோது, தனது உயிரே ஊசலாடிக்கொண்டிருக்கிறபோது, தனது நிலையே மற்றவர்களால் பரிதாபப்படுகிறதுபோல இருக்கிறபோது, ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்கிறார் என்றால், அதுதான் ஒரு அரசரின் உணர்வாக இருக்க...