† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
திருக்காட்சிப் பெருவிழா திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது. இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின்...
Like this:
Like Loading...
“It was to destroy the devil’s works that the Son of God revealed Himself.” —1 John 3:8 The purpose of God becoming man, and therefore the purpose of Christmas, is to destroy the devil’s works. That’s why the anti-Christ denies Christ come in the flesh (1 Jn 4:2-3). That’s why Herod “convulsed” in a violent reaction when he heard about the newborn King of the Jews (see Mt 2:2ff). Herod did not overreact but understood the true meaning of Christmas much better than most people. Christmas is God’s invasion of the devil’s privacy here on earth. Christmas is an attack...
Like this:
Like Loading...
திருப்பாடல் 98: 1. 7-8. 9 ஆண்டவர் முன்னிலையில் நாம் மகிழ்ந்து பாட இந்த திருப்பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின்றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்டவர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டுக்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசியாவை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த மெசியாவை தாங்கள் பார்த்ததாக யோவானின் சீடர்கள் சான்று பகர்வதை இன்றைய நற்செய்தியும் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை வீண்போகவில்லை என்பதையும், கடவுள் தன்னுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதையும், இது மகிழ...
Like this:
Like Loading...
“When you see the Spirit descend and rest on Someone, it is He Who is to baptize with the Holy Spirit.” —John 1:33 The finale of the Christmas season is not Christmas day or even Epiphany but the Baptism of Jesus. This is more emphasized in the Eastern Church. Christmas is Trinitarian. Christmas is to the Father, through the Son, and in the Spirit. Christmas is focused on Christ and culminates in the Holy Spirit, the only true Christmas Spirit. Thus, we should be looking to conclude the Christmas season by having the Holy Spirit stirred into flame in our...
Like this:
Like Loading...
சிந்தனை: திருப்பாடல் 98: 1- 6 ஆண்டவரை வாழ்த்த வேண்டும், போற்ற வேண்டும், புகழ வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்பவிடுக்கிறார். எதற்காக கடவுளைப் போற்ற வேண்டும்? ஏனென்றால், அவர் இந்த உலகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடுதலையை நமக்குத்தந்திருக்கிறார். இங்கே விடுதலை என்று சொல்லப்படுவது என்ன? எந்த விடுதலையை ஆசிரியர் இங்கே கோடிட்டுக்காட்டுகிறார்? தொடக்கநூலில் (1: 31) நாம் பார்க்கிறோம்: ”கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாக இருந்தன”. தொடக்கத்தில் இருந்த இந்த ஆரோக்யமான நிலை தொடரவில்லை. அது மனிதனின் கீழ்ப்படியாமையால் இழந்துபோனதாக மாறியது. மனிதனின் தவறால் தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தது. தான் படைத்த மனிதனே இப்படி தீமை நுழைவதற்கு காரணமாகிவிட்டானே என்று, கடவுள் கோபம் கொண்டு மானுட சமுதாயத்தை புறந்தள்ளி விடவில்லை. இழந்து போனதை மீட்டெடுக்க வாக்குறுதி கொடுக்கிறார். அந்த எதிர்கால விடுதலையை இறைவாக்கினர் வாயிலாக முன்னறிவிக்கிறார். அந்த விடுதலையைத்தான் இந்த திருப்பாடலில்...
Like this:
Like Loading...