† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இயேசுவின் பார்வையில் புனிதம்

புனிதம் என்ற பெயரில் மனிதத் தேவையை பொருட்படுத்தாது விடுவது, அந்த புனிதத்தை மாசுபடுத்துகின்ற செயல் என்பதை, இன்றைய நிகழ்ச்சி மிக அழகாக நமக்கு எடுத்துரைக்கிறது. புனித பொருட்களை மற்றவர்களின் தேவைக்கு பயன்படுத்துவது தான், அந்த புனிதப்பொருட்களுக்கான உண்மையான விலை. இன்றைய நாளில் ஓய்வுநாளில் பசியாயிருந்த சீடர்கள் கதிர்களைப் பறித்து உண்கிறார்கள். பரிசேயர்கள், ஓய்வுநாளை மீறிய செயலாகப் பார்க்கிறார்கள். அதனைக் கண்டிக்கிறார்கள். குற்றம் காண துடிக்கிறார்கள். ஆனால், இயேசு புனிதம் என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு எடுத்துரைக்கிறார். பொதுவாக, குழந்தைகள் மத்திய கிழக்குப் பகுதிகளில் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டனர். காரணம், ஆலயங்களும், அதனைச்சார்ந்த இடங்களும் பாரம்பரியத்தையும், புனிதத்தையும் பறைசாற்றுவதாக நினைத்தனர். அங்கே குழந்தைகள் அதன் புனிதத்தன்மையை கெடுத்துவிடுவார்கள் என்று மக்கள் நினைத்தனர். எனவே, அவர்கள் தடைசெய்யப்பட்டனர். ஆனால், புனித நாளோ, புனித பொருட்களோ மனிதத்தேவையை நிறைவு செய்கிறபோதுதான், புனிதத்தன்மையைப் பெறுகிறது. பலிக்கு வைக்கப்படுகிற அப்பம், பசியாயிருக்கிறவனுக்குக் கொடுக்கப்பட்டால், அதுதான் உண்மையான பலி....

WHY DISOBEY?

“Does the Lord so delight in holocausts and sacrifices as in obedience to the command of the Lord?” —1 Samuel 15:22 Saul greatly displeased the Lord because of his disobedience. The first sin was disobedience. Sin is always disobedience. Human nature became fallen and wounded because of the disobedience of Adam (see Rm 5:19). We are saved by Jesus’ obedience even to death on the cross (Phil 2:8). Obedience and disobedience are of the utmost importance. Therefore, it is important for us to know why we disobey. This can help us accept God’s grace to obey. Samuel implied that Saul...

இறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்

யூதச்சட்டப்படி ஆண்டிற்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்படும் பாவக்கழுவாய் போக்கும் நாளன்று அனைவரும் கட்டாயம் நோன்பிருக்க வேண்டும். இது தவிர, சில பழமைவாத யூதர்கள் வாரத்திற்கு இருமுறை நோன்பிருந்தனர்(திங்கள் மற்றும் வியாழன், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை). திருமணத்தைப்பொறுத்தவரையில் யூதர்களுக்கு திருமணம் முடிந்தாலும் ஒரு வாரமோ அல்லது இன்னும் அதிக நாட்களோ தொடர்ச்சியாக விருந்து நடைபெறும். விருந்தினர்களுக்காக திருமண வீடு எப்போதும் திறந்தே இருக்கும். திருமண விருந்து மகிழ்ச்சியான விருந்து. எனவே, திருமண விருந்தில் பங்குபெறும் விருந்தினர்களுக்கு, வாரம் இருமுறை நோன்பு இருப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படாதவாறு இந்த விலக்கு அவர்களுக்குத் தரப்பட்டிருந்தது. இதைத்தான் இயேசு இங்கே சுட்டிக்காட்டுகிறார். “மணமகன் தங்களோடு இருக்கும் வரை நோன்பிருக்க முடியுமா?” மாற்கு 2: 19. இயேசு கிறிஸ்து நோன்பு இருப்பதை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏனென்றால், இயேசுவே தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்தில் 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பிருந்தார். மாறாக,...

HOLINESS: THE MEANING OF LIFE

You “have been consecrated in Christ Jesus and called to be a holy people.” —1 Corinthians 1:2 We are “called to be holy.” God the Father wants His children to be, act, work, think, talk, love, and live as He does. This is the meaning of holiness: to be like God “in every aspect” of our conduct (1 Pt 1:15). Holiness is a gift from the all-holy God. Only by His grace can we become holy. Holiness comes through the Holy Spirit, that is, the Spirit Who makes us holy. However, we must choose to accept the Spirit’s gift of...

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!

இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப்போக்குபவர், என்று திருமுழுக்கு யோவான் இயேசுவைப்பற்றிச் சான்று பகர்கிறார். இயேசுவை எதற்காக ஆட்டுக்குட்டியோடு யோவான் ஒப்பிட வேண்டும்? என்று பார்த்தால், ஆட்டுக்குட்டியைப்பற்றி பழைய ஏற்பாட்டின் பார்வை நமக்கு தெரிய வேண்டும். ஆட்டுக்குட்டி என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் பாவம் போக்கும் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விலங்கு. விடுதலைப்பயணம் 28: 38 ல் வாசிக்கிறோம்: ‘ஒரு வயது செம்மறிக்குட்டிகளை நாளுக்கு இரண்டு வீதம், எந்நாளும் நீ பலிபீடத்தில் பலியிடுவாய்.’ அதாவது இஸ்ரயேல் மக்களுடைய பாவம் போக்கும் பலியாக அன்றாடம் இது பலியிடப்பட்டது. அதேபோல் விடுதலைப்பயணம் 12 வது அதிகாரத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்தபோது ஆண்டவரின் கோபம் பார்வோன் மன்னன் மீது விழுவதை நாம் வாசிக்கிறோம். அப்போது எகிப்திய குடும்பங்களின் தலைமகன்கள் அனைவரும் இறக்க நேரிடுகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை கதவு நிலைகளில் பூசியிருந்த இஸ்ரயேல் மக்களின் வீடும், பிள்ளைகளும் காப்பாற்றப்படுகிறார்கள். இவ்வாறு, ஆட்டுக்குட்டியின் இரத்தம்...