† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...

THE KNOW-IT-ALL

“The Paraclete, the Holy Spirit Whom the Father will send in My name, will instruct you in everything, and remind you of all that I told you.” —John 14:26 Eternal life is to know God the Father and Jesus (Jn 17:3). Because love requires freedom and freedom requires some knowledge, knowledge is necessary to love. Therefore, we are created both to know and to love God. We can “perish for want of knowledge” (Hos 4:6). Because knowing is so important for life and love, teaching is extremely important in God’s plan. Although God the Father (see Jn 6:44-45) and Jesus...

வாழ்க்கை என்னும் கொடை

திருத்தூதர் பணி 14: 5 – 18 தனி மனித வழிபாடு, நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது என்பதற்கு, இன்றைய வாசகம் அருமையான எடுத்துக்காட்டு. பவுல் மற்றும் பர்னபா ஆகிய இருவரும், மக்கள் நடுவில் சென்று, நோய்களை குணமாக்குகின்றனர். முடவர்களை நடக்கச் செய்கின்றனர். அதனைக்கண்டு அவர்களை வழிபடுவதற்காக, அவர்களுக்கு பலி செலுத்துவதற்காக ஒரு கூட்டம் அவர்களிடத்தில் வருகிறது. அதனைப் பார்த்து, பவுலும், பர்னபாவும் அதனை புறக்கணித்துவிட்டு, அவர்களை கண்டிக்கின்ற விதமாக, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். பணம் கொடுத்து விளம்பரங்களை தேடிக்கொள்ளும் இந்த உலகத்தில், இறைவன் ஒருவர் தான் மகிமைப்படுத்தப்பட வேண்டியவர் என்பதில், உறுதியாக இருந்து அதனை வாழ்ந்தும் காட்டியிருக்கிறார் பவுலடியார். உண்மைதான். இறைவனுக்காக அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன் என்று வெறும் வார்த்தையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் நிறைவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். புறவினத்து மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே அர்ப்பணித்த பவுலடியார், எந்த...

JESUS, THE WAY

“How can we know the way?” —John 14:5 We rely on our phone or GPS (Global Positioning System) to tell us where to go. The GPS device knows your exact location on earth. You tell it where you want to go. Then the GPS talks to you in a voice that tells you each street to turn on, and exactly where to drive. People trust the voice on the GPS. Each of us has problems in this life, and we want to know “the way” out of these problems. We’d like a GPS to show us “the way” to move...

அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 கடவுள் எல்லா மனிதர்களையும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அழைப்புவிடுக்கிறார். கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று, கடவுளின் வழியில் நடக்கிறவர்கள் தான், ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வாழ்கின்றனர். எப்போது நாம் கடவுளின் பணிக்காக நம்மை முழுமையாகக் கையளித்து, அதில் அர்ப்பணம் உள்ளவர்களாக வாழ ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் கடவுளின் உடைமையாக மாற ஆரம்பிக்கிறோம். கடவுளின் பிள்ளைகளாக நமது வாழ்வு தொடங்க ஆரம்பிக்கிறது. கடவுளின் பணியை நாம் செய்ய தொடங்கிய பிறகு, கடவுள் நமக்கான திட்டத்தை வகுக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவிலும், அவரது வழிநடத்துதல் இருக்கிறது. அதிலும் சிறப்பாக, கடவுளின் பாதுகாப்பு நமக்கு நிறைவாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஒரு சில சாதாரண மனிதர்கள், ஆனால் கடவுள் அஞ்சி வாழ்ந்தவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கிறபோது, கடவுளின் வல்லமையும், பாதுகாவலும் எந்த...