† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உம் திருச்சட்டத்தின் மீது எத்துணைப் பற்றுகொண்டுள்ளேன்

திருப்பாடல் 119: 57, 72, 76 – 77, 127 – 128, 129 – 130 திருச்சட்டம் என்பது கடவுள் மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக கொடுத்த ஒழுங்குமுறைகள். ”எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்பது தான், சட்டங்களின் அடிப்படைத்தன்மை. எல்லா மனிதருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, சட்டங்கள் இயற்றப்படுகிறது. ஆனால், மனிதர்களின் சுயநலம் அந்த சட்டங்களை காற்றிலே பறக்கவிட்டு, ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைப்பதாக அமைகிறது. இந்த திருப்பாடல் கடவுளின் திருச்சட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஓர் ஆன்மாவின் பாடல். திருச்சட்டம் என்பது கடைப்பிடிப்பதற்கு எளிதானது அல்ல. மற்றவர்கள் எப்படி வாழ்ந்தாலும் நான் இப்படித்தான், இந்த வரையறைக்குள் தான் வாழுவேன் என்பது கடினமான ஒன்று. ஆனாலும், இறுதிவரையில் அதனை கடைப்பிடித்து வாழக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படி வாழ முயற்சி எடுத்துக்கொண்டிருந்த மனிதரின் ஆசை உணர்வுகள் இங்கே பிரதிபலிக்கிறது. திருச்சட்டத்தை உயர்வான, விலைமதிப்பில்லாதவற்றிற்கு ஒப்பிடுகிறார். அது நேரிய...

LOUD SPEAKER

“We have that spirit of faith of which the Scripture says, ‘Because I believed, I spoke out.’ We believe and so we speak.” –2 Corinthians 4:13 St. James spoke out publicly without fear. In the book of the Acts of the Apostles, we read about the speeches of Peter and John, but James proclaimed the truth so powerfully that Herod chose him as the first apostle to be killed (Acts 12:2). However, James was initially fearful and ran from conflict (Mk 14:50). Yet after receiving the Holy Spirit at Pentecost, James was “filled with the Holy Spirit” (Acts 2:4) and...

நம்பிக்கையாளர்கள்

2கொரிந்தியர் 4: 7 – 15 நம்பிக்கையாளர்களின் வாழ்க்கை எப்படி அமைகிறது? என்பதை, இன்றைய வாசகம் நமக்கு சிறப்பான விதத்தில் வெளிப்படுத்துகிறது. பொதுவாக, நம்பிக்கையாளர்கள் தாங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் பொருட்டு, பல்வேறுவிதமான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகுகிறார்கள் என்பது, அன்றாட வாழ்க்கையில் நாம் கண்கூடாக பார்க்கிற உண்மை. அவர்கள் படுகிற துன்பங்கள், சோதனைகள், சவால்கள், அவர்களுக்கு சோர்வை உண்டாக்குகிறதா? அவர்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்று விட தூண்டுகிறதா? என்று, நாம் சிந்தித்துப் பார்த்தால், பதில் நாம் ஆச்சரியப்படும்படியாகத்தான் இருக்கும். அத்தகைய நம்பிக்கையாளராகிய விளங்கிய பவுலடியார் தன்னுடைய நம்பிக்கை வாழ்வை அணுகுகிற முறையை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம். தன்னுடைய வாழ்க்கையில் அவர் துன்பங்களைப் பார்க்கவில்லை என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. உண்மையில் தன்னுடைய வாழ்வு முழுவதிலும் துன்பத்தை மட்டுமே அனுபவித்தாக அவர் சொல்கிறார். ஆனால், எவ்வளவு நெருக்கடிகள், வேதனைகள் வந்தாலும், அதில் அவர் எப்போதுமே மகிழ்ச்சியோடு தான் இருந்தார் என்பதை, வெளிப்படுத்துகிறார்....

HOW TO GET GOOD LEADERS

“Return, rebellious children, says the Lord, for I am your Master.” –Jeremiah 3:14 The Lord promised that, if we repented of our rebellion against Him, He would appoint over us wise and prudent leaders after His own heart (Jer 3:15). Then we would become fruitful and reach new heights (Jer 3:16ff). We do not produce “grain a hundred- or sixty- or thirtyfold” (Mt 13:8) if we do not repent of: • not growing in understanding God’s Word (Mt 13:19). The Holy Spirit has been given to us as our Teacher (Jn 14:26). If we are docile to the Spirit, we...

தேர்வில் வெற்றியா? மதிப்பெண் என்ன?

மத்தேயு 13:18-23 காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்களை மூடும் வரை இறைவார்த்தையானது நம் உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. அது பல வடிவங்களிலே விதைக்கப்படுகிறது. திருவிவியத்தைப் படிக்கும்போதும், அருட்தந்தையர்களின் மறையுரைகளைக் கேட்கும் போதும் ஒரு சில சான்றோர்கள் நம்மோடு உறவாடும் போதும் இறைவார்த்தையானது உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்ட இறைவார்த்தையை எடுத்து அதை வாழ்ந்து காட்டுபவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவர்களின் மதிப்பெண்களையும் நாம் பார்க்கலாம். 1. முப்பது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சாத்தான் அவர்களிடமிருந்து எடுத்துவிடுவதால் எல்லாமே இடையிலே முடிந்துவிடுகிறது. இவர்களின் மதிப்பெண்கள் முப்பது. தோல்வியடைகிறார்கள். 2. அறுபது மதிப்பெண்கள் இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உண்டு. ஒருசிலவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இடையில் சாத்தான் தொந்தரவு கொடுப்பதால் அவர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. இவர்களின் மதிப்பெண் அறுபது. ஏதோ தத்தி முத்தி வெற்றியடைந்து விடுகிறார்கள்....