† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஆட்சியைப் பிடிக்கனுமா? அரியணை வேண்டுமா?

மத்தேயு 19:23-30 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆட்சி, அரியணை இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்கும்போதே நம் மனதிற்குள்ளே மகிழ்ச்சி ஊறுகிறது. எப்போது இவைகள் நமக்கு கிடைக்கும் என்ற ஏக்கம் அதிகமாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகம் இந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கிறது. பேதுரு, ஆண்டவர் இயேசுவைப் பார்த்து நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்றுக் கேட்டபோது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டு விதமான வாக்குறுதிகளை வழங்குகிறார். வாக்குறுதி 1: உங்களுக்கு விண்ணக ஆட்சி கிடைக்கும். மேலும் அந்த ஆட்சியிலே நீங்கள் அரியணையில் இருப்பீர்கள் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சி. அங்கு அரியணை உண்டு. அந்த அரியணைக்கு முடிவே...

SHOCK THERAPY

“Will you not tell us what all these things that you are doing mean for us?” –Ezekiel 24:19 The actions of Ezekiel and Jesus in today’s Mass readings are shocking. They are prophetic statements meant to capture a person’s attention. In our secular culture, we are used to outlandish behavior and shocking statements. Grocery stores sell tabloid newspapers, and the typical headline uses the word “shocking.” News programs are on the watch for sound bites that grab our attention. After a while, we grow desensitized to these approaches, and we become shock-proof. Likewise, the rich young man and the people...

அன்பு செய்ய கற்றுக்கொள்வோம்

எசேக்கியேல் 24: 15 – 24 எசேக்கியேலின் மனைவி இறந்து போவாள் என்கிற அடையாளம் இறைவாக்கினருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அவள் இறந்து போனாலும், அதற்காக எந்தவிதமான புலம்பலோ, வருத்தமோ, அழுகையோ இருக்கக்கூடாது என்று, இறைவாக்கினருக்கு ஆண்டவர் அறிவுறுத்துகிறார். இறந்தவர்க்காக அழுவது என்பது மதக்கடமை. நம்முடைய உள்ளத்து வருத்தங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு. ஆனால், நம்பிக்கை உள்ளவர்களுக்கு அது தேவையில்லை. ஏனெனில், இறப்பு என்பது இன்னொரு வாழ்விற்கான பயணம். இந்த நிகழ்ச்சி நடக்கிறபோது, மக்கள், இறைவாக்கினரிடம், அவர் செய்வதன் பொருளைக் கேட்கிறார்கள். அவருக்கு நடந்தது போலவே, இஸ்ரயேல் மக்களுக்கும் நடக்கும் என்பதை, இறைவாக்கினர் அவர்களுக்கு அறிவிக்கிறார். அது நடக்கும் நேரத்தில் அவர்களால் அழவும் முடியாது. தங்கள் வருத்தத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. தங்களுக்கிடையே வெறுமனே புலம்பிக்கொண்டு தான் இருக்க முடியும். அப்போது, மக்கள் அனைவரும், உண்மையான கடவுள், “யாவே“ இறைவனே என்பதை அறிந்துகொள்வார்கள். இந்த காட்சிகளும், நிகழ்வுகளும் இறைவாக்கினர் வழியாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவது,...

SAVE THE CHILDREN

“Lord, Son of David, have pity on me! My daughter is terribly troubled by a demon.” –Matthew 15:22 Jesus delivered many people from demons. Sometimes He delivered children from demons (Mt 15:22; Mk 9:17ff). This raises the question: How can innocent children who could not have grievously sinned or been knowingly involved in the occult be possessed or troubled by demons? Children suffer innocently for the sins of their parents and the world. This suffering seems to include even harassment from the evil one. Sins committed by any of us can result in the severest form of child abuse: exposing...

கடவுளே மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்

திருப்பாடல் 67: 1 – 2, 4, 5 – 7 இந்த திருப்பாடல் எண்ணிக்கை நூல் 6: 23 – 25 இறைவார்த்தையை மீண்டும் நமக்கு நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவர் சொல்கிறார்: ”நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன் மீது அருள்பொழிவாரா. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக. இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர். நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்”. இங்கு இறைவனின் பணியாளர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் ஆசீர்வாதமானவர்களாக இருக்க முடியும் என்கிற செய்தி இங்கு நமக்கு தரப்படுகிறது. இறைவன் அவருடைய பெயரை மக்கள் புனிதப்படுத்த, அவர்களை வழிநடத்த, தன்னுடைய செய்தியை அறிவிக்க இறைப்பணியாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற வல்லமையையும், கொடைகளையும் இந்த...