† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மரபா? மனிதனா?

மாற்கு 3: 1 – 6 மரபு மனிதனின் வாழ்வை நெறிப்படுத்த உதவுகின்றது. ஏனென்றால் அதன் வழியாகத் தான் நாம் நம்முடைய பண்பாட்டை அறிந்து கொள்ள முடியும். ஒரு வீடு என்றால் அதற்கு வாயில் என்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வாயிலின் வழியாகத் தான் செல்ல முடியும். மரபு என்பது மனிதன் இந்த மண்ணில் வாழ வாயிலாக இருக்கின்றது. ஆனால் மரபே வாழ்க்கையாக மாறும் போது அங்கு குழப்பம் ஏற்படுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இத்தகைய ஒரு நிலையைத்தான் நாம் பார்க்கின்றோம். ஓய்வுநாள் என்பது மக்களின் வாழ்வை நெறிப்படுத்துதற்காகத் தான் என்று விவிலியம் கூறுகிறது. இது கடவுளின் படைப்பின் பிண்ணனியிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பரிசேயர்கள் மனிதன் ஓய்வு நாளுக்காகத்தான் என்ற எண்ணத்தில் வாழ துவங்குகினார்கள். ஆனால் இயேசு ஓய்வு நாளை விட ஒருவனின் வாழ்வு முக்கியம் என எண்ணுகின்றார். அதனால் தான் கை சூம்பிய மனிதனுக்கு...

BAPTIZED IN THE SPIRIT

“It is He Who is to baptize with the Holy Spirit.” —John 1:33 Many people talk about being “baptized in the Spirit.” By this, they usually mean having a renewal of their life in the Spirit. However, the Bible considers being baptized in the Spirit to be the same as being baptized, and not a renewal of life in the Spirit. Thus, many people use the phrase, “baptized in the Spirit,” in an un-Biblical way. Although these people are wrongly using biblical terminology, they are “correct” pastorally. We have a great need to renew our being baptized in the Spirit....

எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் நீர் கேட்கவில்லை

இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், வழிபாடு என்பது அவர்களது வாழ்வோடு இணைந்ததாக இருந்தது. அந்த வழிபாட்டில் எரிபலிகளையும், பாவம் போக்கும் பலிகளையும் அவ்வப்போது, இஸ்ரயேல் மக்கள் நிறைவேற்றினார்கள். எரிபலிகள் என்பது என்ன? பலியாக்கப்படுகிற விலங்குகளை பீடத்தின் மீது, அதனை எரிப்பது தான் எரிபலி. எரிகிற அந்த பலிப்பொருளின் நறுமணம் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய நன்றியின் அடையாளம் என்று மக்கள் நம்பினார்கள். வானத்திலிருந்து நெருப்பு வந்து பலிப்பொருளை எரித்துவிட்டால், அது கடவுளுக்கு ஏற்கத்தக்க பலிப்பொருள் என்ற நம்பிக்கையும் இஸ்ரயேல் மக்களிடையே இருந்தது. தொடக்கநூலில் நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு, கடவுளுக்கு செலுத்துகிற பலி தான், முதல் எரிபலி(தொ.நூல் 8: 20). பாவம் போக்கும் பலி எனச்சொல்லப்படுவது ஆண்டிற்கு ஒருமுறை, பாவக்கழுவாய் விழா அன்று, தலைமைக்குரு தனது பாவங்களுக்காக ஒரு காளையையும், மக்களின் பாவங்களுக்காக செம்மறிஆட்டையும் பலி செலுத்தி, அதன் இரத்தத்தை மக்கள் மீது தெளிக்க, அவர்களது பாவம் போக்கப்படும் என்று அவர்கள் நம்பினார்கள். இது...

THE CUTTING-EDGE WORD

“God’s word is living and effective, sharper than any two-edged sword.” —Hebrews 4:12 Like a surgeon’s scalpel, the Word of God cuts to the center of our heart and hits the correct spot. Jesus is the Word (Jn 1:1), and “nothing is concealed from Him; all lies bare and exposed to the eyes of Him to Whom we must render an account” (Heb 4:13). God’s Word is a scalpel and a sword (see Eph 6:17). We trust ourselves to the care of expert surgeons, to wield their scalpels precisely and effectively. Will we trust ourselves to the scalpel of Jesus,...

ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்படுகிறது. இது வெறும் உதட்டளவில் வெளிப்படக்கூடிய வார்த்தை அல்ல. அனுபவித்து அறிந்து வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை இறைவன் ஆரோன், மோசே வழியாக வழிநடத்தினார். அவர்கள் சீனாய் வனாந்திரத்தில் புகலிடம் பெற்றனர். அது ஒரு வறண்ட பாலைநிலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரிசல்காடு. இவ்வளவு மக்களை வழிநடத்த வேண்டுமென்றால், அவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டுமென்றால், ஒழுங்குமுறைகள் கொடுக்கப்பட வேண்டும். அதைத்தான் சீனாய் மலையில் மோசே வழியாக, மக்களுக்கு வழங்கினார். இந்த ஒழுங்குமுறைகளை எதிர்மறையாகப் பார்த்தால், ஏதோ நம்மை கட்டுக்குள் வைக்கக்கூடிய சட்டங்கள் போல தோன்றும். ஆனால், அவற்றை நேர்மறையாகச் சிந்தித்தால், அது நமது வாழ்வை செதுக்கக்கூடியவைகளாகத் தோன்றும். நம் அனைவரையும் வாழ வைக்கக்கூடியதாக தோன்றும். ஆக, கடவுளின் வார்த்தைகள் எந்த அளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கிறது. அதை எப்படி நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனை எப்படி...