† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உமது திருவுளம் நிறைவேற்ற கடவுளே இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 1 – 3, 6 – 7, 9 – 10 விருப்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நமது விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயற்சி எடுக்கிறோம். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்ற முடியுமா? எல்லா விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கு தகுதியானதா? நிச்சயம் இல்லை. மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்கள். மனம் நினைப்பதையெல்லாம் நாம் நிச்சயம் நிறைவேற்ற முடியாது. அப்படி நிறைவேற்றினால் அதில் 90 விழுக்காடு தவறான காரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், அது தன்போக்கில் சென்று, பல தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். இந்த நிலையை தாவீது அரசர் அறியாதவரல்ல. அவர் ஏற்கெனவே பத்சேபா விஷயத்தில் அனுபவப்பட்டிருக்கிறார். இந்த திருப்பாடல், உள்ளத்தில் எழுந்திருக்கிற ஒருவிதமான சோதனையை வென்று, மகிழ்ச்சியின் நிறைவில் வெளிப்படக்கூடிய திருப்பாடல். தாவீது அரசருக்கு ஒருவிதமான சோதனை. தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற நெருடல் மனதிற்குள்ளே அரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது தவறானது என்பதை, அவரது அறிவு...

CONVERSION CONVERSATIONS

“Before all men you are to be His witness to what you have seen and heard.” –Acts 22:15 The conversion of Paul is repeated three times at considerable length in the Acts of the Apostles (see Acts 9:1-22; Acts 22:1-21; Acts 26:1-23). This threefold repetition indicates how critical it is for people to hear about God bringing someone to conversion. Listen to Paul’s witness: “I once thought it my duty to oppose the name of Jesus the Nazorean in every way possible…I sent many of God’s holy people to prison. When they were to be put to death I cast...

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்திப் பறைசாற்றுங்கள்

திருப்பாடல் 117: 1, 2 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கியபோது, அவரது தொடக்க முழக்கமாக அமைந்தது: ”மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்பதுதான். இன்றைய தியான வாக்கியமும், உலகமெல்லாம் சென்று, படைப்பிற்கு நற்செய்தியைப் பறைசாற்ற அழைப்புவிடுக்கிறது. நற்செய்தி என்றால் என்ன? இயேசு அறிவிக்க வந்த நற்செய்தி என்ன? லூக்கா 4: 18 ம் இறைவார்த்தையில் அந்த நற்செய்தியை இயேசு அறிவிக்கிறார். அதாவது, ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்நிலையில் இருப்போர் அனைவரையும் கடவுள் அன்புசெய்கிறார். அவர்களும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். அவர்களும் முழுமையாக அன்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான், இயேசுவின் நற்செய்தி. ஏன் இந்த நற்செய்தி உலகம் முழுவதிலும் அறிவிக்கப்பட வேண்டும்? இந்த உலக கண்ணோட்டத்தின்படி பார்க்கிறபோது, பல மக்கள் தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதனால், அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இனி வேறு வாழ்வே இல்லை என்பது போன்ற தவறான பார்வைகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும், மீ்ண்டும் செய்த...

THERE’S SOMETHING ABOUT GOD’S WORD

“Jonah began…announcing, ‘Forty days more and Nineveh shall be destroyed,’ when the people of Nineveh believed God.” –Jonah 3:4-5 At Mass this morning, the gentleman seated directly in front of me paid no attention whatsoever to the homily. He was fidgeting in his seat, looking to the right and left as the pastor told several anecdotes related to today’s readings. Halfway through the homily, the pastor quoted from memory Jesus’ words in Matthew 25:35-45. At the very instant the pastor quoted the first word of the Scripture passage, this man’s head literally whipped around ninety degrees, and he stared intently...

மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்

இன்றைய நற்செய்தியில் மூன்று முக்கியமான வார்த்தைகள் இயேசுவின் பணிவாழ்வின் மையமாகக் கருதப்படுகிறது. மனம்மாற்றம், நற்செய்தி மற்றும் நம்பிக்கை என்பதுதான் அந்த மூன்று வார்த்தைகள். மனம்மாற்றம் என்பது பாவத்தை வெறுப்பது. இதுவரை பாவத்திலே வாழ்ந்தவன், பாவத்தோடு வாழ்ந்தவன், பாவியாக இருந்தவன், இப்போது பாவத்தை வெறுக்கிற நிலைதான் மனமாற்றம். இயேசுவின் இரண்டாம் செய்தி நற்செய்தி. இயேசு நற்செய்தி அறிவிப்பதற்காக வந்திருக்கிறார். அது என்ன நற்செய்தி? நம்பிக்கை தரும் நற்செய்தி. முற்காலத்தில், வாழ்வே நம்பிக்கையின்மையினால் நிறைந்திருந்தது. அனைத்தையும் எதிர்மறையாக சிந்திக்கும் எண்ணம் இருந்தது. ஆனால், இயேசுவின் மண்ணக வாழ்வு நம்பிக்கை தரும் நற்செய்தியாக இருக்கிறது. அவரது போதனைகளும், அவர் செய்த புதுமைகளும் நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு, புதிய ஒளியைத்தருவதாக இருக்கிறது. இயேசு தரும் மூன்றாவது செய்தி நம்பிக்கை. நம்பிக்கை எதை வெளிப்படுத்துகிறது? நம்பிக்கை கடவுளின் அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை, பராமரிப்பை உணர்த்துகிறது. கடவுள் எல்லாம் வல்லவராக இருக்கிறார் என்பதையும், அவரிடத்திலே நாம் நம்பிக்கை வைக்கிறபோது, நாம் மகிழ்வோடு...