† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

படைப்புக்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது

திருப்பாடல் 19: 2 – 3, 4 – 5 கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? இவை போன்ற கேள்விகள், மனித உள்ளத்தில் அடிக்கடி எழக்கூடியவை. ஏனெனில், மனிதர்களாகிய நாம் எப்போதுமே, காரணங்களை, விளக்கங்களைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். இன்றைய திருப்பாடல் கடவுளின் இருப்பை, அவருடைய மாட்சிமையை, மகிமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த திருப்பாடலில் வரக்கூடிய முதல் நான்கு இறைவார்த்தைகளுமே, கடவுளின் வல்லமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. நாம் காலை விழித்தெழுவதிலிருந்து பார்க்கக்கூடிய எல்லாவற்றிலும், கடவுளின் மகிமையைக் கண்டுனரலாம். காலையில் எழக்கூடிய சூரியன், எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிற மேகக்கூட்டங்கள், இரவு, பகல் மாற்றம் – இவையனைத்துமே தங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கின்றார் என்பதை, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நாளை சூரியன் தோன்றுமா? தோன்றும் என்கிற நம்பிக்கையை, இயற்கை நமக்கு தந்துகொண்டே இருக்கிறது. அவையனைத்துமே கடவுளின் வேலைப்பாடுகள் தான். கடவுளை நாம் வேறு எங்கேயும் தேட வேண்டாம்?...

NUTS ABOUT FRUIT

“My Father has been glorified in your bearing much fruit and becoming My disciples.” —John 15:8 It’s late tonight and I’m tired. In my prayer for this teaching, I’m telling God I want sleep now rather than asking for fruitful words to write so He can be glorified (Jn 15:8). I don’t want to hear about being pruned (Jn 15:2). Does this sound familiar? The battle over bearing fruit really shows who is lord of our lives, Jesus or us. We can bear any fruit God requires of us, because the energy required to produce the fruit comes unfailingly from...

இணைந்திருந்தால்.. .. நிலைத்திருந்தால் .. .. கேட்பதெல்லாம் நடக்கும்

வாழ்க்கை என்பது கனி நிறைந்த வாழ்வாக இருக்க வேண்டும். இந்த கனி தரும் வாழ்வு என்பது, நமக்குள் நிறைவையும் நிம்மதியையும் தருவது. பிறருக்கு பயன்படக்கூடியது. இறைவனுக்கு மகிமை சேர்ப்பது. ஒருவன் வாழ்ந்ததன் பயன் இதுதான். இத்தகைய கனி தரும் வாழ்க்கையை வாழ, ஒருவன் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இக் கருத்தை இயேசு இப்பகுதியில் பலமுறை உணர்த்துகிறார். ‘இணைந்திருத்தல்’ , ‘நிலைத்திருத்தல்’ என்னும் வார்த்தைகளை இதற்கென பலமுறை பயன்படுத்துகிறார். “இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது”. “இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்”. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”. “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.” இவ்வசனங்கள் இதற்குச் சான்றுகள். இயேசுவோடு இணைந்திருப்பதன் நெருக்கம் பல பலன்களைக் கொடுக்கவல்லது. இயேசுவை விட்டுக் கொஞ்சம் விலகினாலும் அந்த இழப்பு, கொஞ்சம் அல்ல. மிக மிகப் பெரிது. “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது”...

ABBA-POWER

“I solemnly assure you, the man who has faith in Me will do the works I do, and greater far than these.” —John 14:12 The Lord promises us that we will do far greater works than He did (Jn 14:12). We know of Jesus raising people from the dead, healing countless sick people, driving out legions of demons, walking on water, multiplying the loaves and fish, transforming the most hardened hearts, etc. How can we do these things? How can we surpass these works? The answer Jesus gave to these questions is: “Because I go to the Father” (Jn 14:12)....

பவுலடியாரின் நம்பிக்கை வாழ்வு

திருத்தூதர் பணி 14: 19 – 28 தொடங்கியிருக்கிற பணியில், உறுதி கொண்ட கொள்கையில் பிடிப்போடு இருக்க வேண்டும் என்கிற வார்த்தைகளுக்கு முன்னோடியாக திகழக்கூடியவராக, பவுலடியார் இருப்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவைப் பற்றி பல இடங்களுக்குச் சென்று அறிவித்து வந்த, பவுலடியாரின் போதனைகளுக்கு மக்கள் நடுவில் ஆதரவும் இருந்தது. எதிர்ப்பும் இருந்தது. எதிர்ப்பு என்பது சாதாரணமானதாக இல்லை. அவரை கொலை செய்ய செல்லும் அளவுக்கு இருந்தது. இன்றைய வாசகம் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது போல பவுல் இறக்கவில்லை. இந்த நிகழ்ச்சி நம்மில் ஒருவருக்கு நடந்திருந்தால், நம்முடைய அடுத்த சிந்தனை என்னவாக இருக்கும்? இனிமேல் இந்த பணி எதற்கு என்று, சோர்ந்துவிடுவோம் அல்லது சற்று உடல் தேறுகிறவரையில் ஓய்வு...