† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இறைவன் காட்டும் பேரன்பு

எசாயா 49: 1 – 6 கடவுளுடைய மக்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனுடைய ஆலயம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு தகர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்தநாட்டிலிருந்து, அவர்களுடைய கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய விசுவாசத்தை சோதிப்பதாக இருக்கிறது. விசுவாசத் தளர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைகிறது. இன்னும் தாங்கள் கடவுளின் பிள்ளைகள் தானா? தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தானா? கடவுள் தங்களை இன்னும் அன்பு செய்கிறாரா? இந்த அந்நிய தேசத்தில் நம் இறைவனைக் காண முடியுமா? அவரை வணங்க முடியுமா? என்கிற பல்வேறு கேள்விகள் அவர்களுடைய உள்ளத்தில் தோன்றி மறைகிறது. இந்த பகுதியில் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது. கடவுள் தன்னுடைய மீட்பரை அனுப்புவார் என்றும், அவர் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, நீதியை நிலைநாட்டுவார் என்றும் வாக்குறுதியை வழங்குகிறார். எசாயா 40 ம் அதிகாரம் முதல் 55 ம் அதிகாரம் வரை உள்ளவை, இரண்டாம் புத்தகமாகச் சொல்லப்படுகிறது. இந்த...

COVENANT-MAKER

“He remembers forever His covenant which He made binding for a thousand generations – which He entered into with Abraham.” –Psalm 105:8-9 God took the initiative to make a covenant, a solemn promise, with Abram. This covenant included a strange ritual: God, represented by a flaming torch, passes physically between the split halves of the sacrificed animals (see Gn 15:9ff). This action is God’s way of swearing that, if He is not faithful to this covenant promise, then may He suffer the fate of the sacrificed animals and be torn in two. It is a most solemn pledge of fidelity...

இறைவன் வாக்குறுதி மாறாதவர்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்கிற சிந்தனையை திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். வாக்குறுதி என்பது என்ன? ஒரு மனிதர் சக மனிதருக்கு “இதைச் செய்கிறேன்” என்று, உறுதி செய்வது தான், வாக்குறுதி. சொல்கிற வாக்கை நிறைவேற்றுவது வாக்குறுதி. இறைவன் பல வாக்குறுதிகளை, தான் படைத்த மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறார். தொடக்க நூலில் நாம் பார்க்கிற முதல் மனிதரிலிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வாக்குறுதி கொடுத்த மனிதர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து தவறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் ஒருபோதும் தவறியது கிடையாது. கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை நிர்பந்தமான வாக்குறுதிகள், நிர்பந்தம் இல்லாத வாக்குறுதிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நிர்பந்தமான வாக்குறுதி என்பது, மனிதன் இதைச்செய்தால், கடவுளும் செய்வதற்கு கட்டுப்பட்டவர் என்பது பொருள். கடவுள் அனைத்தையும் கடந்தவர் என்றாலும்,...

PEARLS AND PIGS

“Do not give what is holy to dogs or toss your pearls before swine. They will trample them under foot, at best, and perhaps even tear you to shreds.” –Matthew 7:6 Have you ever been tempted to toss your pearls before swine? Even if we take this command to mean: “Don’t share the pearls of the Gospel with the swine-eating Gentiles,” the first Jewish Christians did not initially evangelize the Gentiles. In fact, the Lord did call the Jewish Christians to evangelize the Gentiles, but only after they had first devoted themselves to evangelizing the Jews. Are we saying that...

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

திருப்பாடல் 15: 2 – 3a, 3b – 4, 5 “கூடாரம்” என்கிற வார்த்தை கடவுளின் இல்லத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கைப் பேழை கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த பிண்ணனியில் இந்த வார்த்தையை ஆசிரியர் பயன்படுத்துகிறார். கடவுளின் கூடாரத்தில் எல்லாருமே நுழைந்துவிட முடியாது. தகுதியுள்ளவர்கள் மட்டும் தான், நுழைய முடியும். கடவுளின் கூடாரத்தில் நுழைவதற்கான தகுதி என்ன? யாரெல்லாம் நுழைய முடியும்? என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. கடவுளின் கூடாரத்தில் நுழைவதற்கு, நல்லதைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல, தீங்கினைச் செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். நல்ல மதிப்பீடுகளோடு வாழ வேண்டும். அதே வேளையில், தீய நெறிகளிலிருந்து விலக வேண்டும். உண்மை பேசுவதும். மாசற்றவராக நடப்பதும் கூடாரத்தில் தங்குவதற்கான நல்ல மதிப்பீடுகளாக நமக்குத் தரப்படுகிறது. அடுத்தவர்களை இழிவாகப்பேசுவதும், பொறாமை கொள்வதும், இறைவனின் இல்லத்தில் நுழைவதற்கு தடையாகச் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக, வட்டிக்குக் கொடுத்தலும், இலஞ்சம் பெறுவதும்...