† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!  ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாக இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே .  அர்ச்சிஷ்ட மரியாயே! சர்வசுரனின் மாதாவே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.    பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக   ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக, ஆமென்.

பாஸ்கா கால திரிகால செபம்

               (எப்பொழுதும் நின்று கொண்டு)                பரலோகத்திற்கு இராக்கினியோ மனங்களிகூரும்……..                அல்லேலூயா                அதேதெனில் பக்கியவதியான உமது திருஉதரத்தில் அவதரித்தார்                அல்லேலூயா                திருவுளம் பற்றின வாக்கின்படி உயிர்த்தெழுந்தார்                அல்லேலூயா                எங்களுக்காக இறைவனை மன்றாடும்                அல்லேலூயா                எப்பொழுதும் கன்னிகையான மரியோ அகமகிழ்ந்து பூரிப்படைவீர்        ...

கர்த்தர் கற்பித்த செபம்

              பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே உம்முடைய  நாமம் அர்ச்சிக்கப் படுவதாக,                உம்முடிய இராச்சியம் வருக.உம்முடைய  சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,                பூலோகத்தில் செய்யப்படுவதாக.                எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்,எங்களுக்கு தீமை செய்தவர்களை                நங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்.எங்களை சோதனையில்      விழவிடாதேயும் தீமையிலிருந்து எங்களை மீட்டருளும் ஆமென்.

சிலுவைப் பாதை (Way of the Cross)

(பீடத்துக்கு முன்பாக) திருச்சிலுவைப் பாதை தொடக்க செபம் முதல்வர்: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்! எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவா, உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்! சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்; என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்பக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் , நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக,...