† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

திங்கட்கிழமை

  திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்    இறைவா !நான் உம்மிடமிருந்தே வந்தேன் .நீரே என்னைப் படைத்தீர் .முழு மரியாதையுடன் உம்மை     இப்புதிய நாளில் வாழ்த்துகிறான். இந்நாள் உமக்கேற்றதாய் அமைய ஆசீர்பொழியும்.     சென்ற இரவில் என்னைக் காப்பற்றியதர்க்காகவும் ,நான் வாழ புதியதொரு நாளைக்             கொடுத்தட்மைக்கும் நன்றி. உம் சித்தம் என்னவென்று வெளிப்படுத்தும்.உம் சித்தத்தை மன            உறுதியுடன் நிறைவேற்றி உம்மை மகிமைப்படுத்த செய்யும்.   இறைவா!விண் மண்ணின் அரசே ,என் உடலையும்,இதயத்தையும் வழிநடத்தும்.அதனால் நான்   என்றும் மகிழ்ந்து முழு சுதந்திரத்துடன் இன்றும் என்றும் வாழ்வேனாக. உலகின் மீட்பரே!    நீரே என்றும், ஆட்சி செய்வீராக.    என் தாயும் அரசியுமான மரியே,!என்னையே முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன் . உம்மில் பக்தி     கொண்டு என்னையும் என் முழுமையும் உமக்கே அர்ப்பணிக்கின்றேன்.என்னை உம்முடைய    ...

ஞாயிறு

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்   இரக்கமுள்ள புனித இறைவா! புதிய நாள் துவங்கி உள்ளது . எனக்கொரு புதிய நாளை கொடுத்துள்ளீர் .   புதிய வாழ்வைக்கொடையாக கொடுத்தமைக்கு நன்றி .நான் உம்மை அறிந்தமைக்கு ,வாழ்வின்         அனைத்துக் கொடைகளுக்கும் நன்றி .மிகவும் சிறப்பாக எப்போதும், எல்லா நேரங்களிலும் என்னை   நினைத்தமைக்கு அன்பு செய்தமைக்கும் நன்றி. என் மனதை இன்ப படுத்தியமைக்கு நன்றி.எனவே   என்னுடைய இந்த நாளையும் ,சொல் , சிந்தனை அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான் .என்      அமைதி ,இன்ப துன்பங்கள் அனைத்தையும் உமக்கு அர்ப்பணிக்கிறான்.    எது நல்லது?எது கெட்டது?என்பதை எனக்கு தெளிவுப்படுத்தும் .இதனால் நான் உன் சித்தத்தை    நிறைவேற்றுவனாக .நான் உம்மை எப்போதும் நினைத்து வாழ அருள் தாரும் .இதனால் நான் என்    மனச்சன்றிர்க்கும் ,அதன் உறுத்துதளுக்கும் முழு ஒத்துழைப்புடன் என்...

புதன்கிழமை

திரிகால செபம்     கர்த்தர் கற்பித்த செபம்    இறைவா! விண்ணுலுக தந்தை! என்னோருநாளை துவங்கியுள்ளேன்.இதை எனக்கு என் வாழ்வின்     மற்றுமொரு பகுதியாக அளித்துள்ளீர்.இதனால் நன்றியும்,பெருமகிழ்வும் அடைகிறேன்.இந்த     நாளை இறை  இயேசுவின் வழியாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.     கிருஸ்துவே! என் மிட்பரும்,அரசரும் ஆனவரே! இன்று உம்மை மிகவும் பிரமானிக்கமாய்      பின்தொடர்வேன். என் துன்பங்களை வெல்லும் முயற்சிக்கு உம் ஆசீரையும்,அருளையும் தந்தருளும்     என் மனதை உறுதிப்படுத்தும்.எங்களின் அடைக்கலமாயிரும்,அணைத்து நன்மைகளின் உறைவிடமே!     எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்தருளும்.    இறைவா! என் பெற்றோரையும் நெருங்கிய உறவினர்களையும் ஆசீர்வதியும்.இறைவனின்     இரக்கத்தால் இறந்தவர்களின் ஆண்மாக்கள் இறைவனின் சமாதானத்தைப் பெறுவதாக! ஆமென்    மங்கள வார்த்தை செபம்   காவல் தூதர் செபம்   தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.   முடிவுப் பாடல்

செவ்வாய்க்கிழமை

 திரிகால செபம்     கர்த்தர் கற்பித்த செபம் எல்லாம் வல்ல இறை தந்தாய்! உம்முடைய நன்மை தனத்தின் மூலம் நீர் எனக்களித்த இன்னுமொருநாளுக்காக நன்றி கூறி உமக்கு அர்ப்பனிக்கின்றேன் என்னை ஆசிர்வதியும்.இதனால் என் ஒவ்வொருசெயலும் உம் பெருமையை எடுத்துரைப்பதாக. என் விமரிசையை ஒளிர செய்யும்.என்ஆளுமையை பலப்படுத்தும்.என் இதயத்தை வழிநடத்தும்.    வாரும் இறைவா! உம்முடைய ஏவுதலால் உம் முன் நடப்பேனாக. என் செயல் ஒவ்வொன்றுக்கும்    துணைநிற்பீராக.என் செபமும்,வேலையும் உம்மில் துவங்கி முடிவு பெறுவதாக.விண்ணக      புனிதர்கள் அனைவரும் நான் உம்முடன் இணைந்து உம் ஆசிரால் உம் சித்தத்தை நிறைவேற்ற       வேண்டுமென்று செபிக்க வேண்டுகிறேன்.   என் நண்பர்களையும்,அனைத்தையும் படைத்த இறைவா! இன்று நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அன்புடன் பழக உதவும்,அனைவரையும் அன்புடன் அரவணைத்து,    நல்வார்த்தைகளை நல்கி அனைவருக்கும் நான் உதவிக் கரம் நீட்டி வாழ வரமருளும்.ஆமென்.   மங்கள வார்த்தை செபம்   காவல் தூதர் செபம்...