† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

“உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.”யோபு 8:7

“Your beginnings will seem humble, so prosperous will your future be.”Job 8:7

பாவ மன்னிப்புக்காக

              பாவ மன்னிப்புக்காக கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரக்கம் காட்டியருளும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும் . என் பாவம் அற்றுப் போகும்படி என்னைத் தூய்மைபடுத்தியருளும். என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக பாவம் செய்தேன். உமது பார்வையில் தீயது செய்தேன் இதே தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள் இறைவா! மெய்ஞ்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும். என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும். தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதி தந்து புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே  உருவாக்கியருளும். உம் தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும். உமது மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.-ஆமென்.

செபம்

இரக்கத்திற்கான செபம் ஆண்டவராகிய இயேசுவே !எங்கள் மேல் இரக்கம் வையும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்.எங்களைத் தீர்ப்பிடாதேயும்,எங்கள் மூதாதையரின் எல்லாக் குற்றங் குறைகளையும் பாவங்களையும் மன்னித்தருளும்.எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கிவிடும்.எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும் . (காலையிலும் மாலையிலும் 5 நிமிடம் சாஷ்டாங்கம் செய்து இந்தச் செபத்தைச் சொல்ல வேண்டும் )                                                        இயேசுவின் உதவியை வேண்டிச் செபம் இரக்கமுள்ள இயேசுவே !உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம்.உம்மில் நம்பிக்கை வைக்கிறோம் . எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும்.உம்மை அனைவரும் அறிந்து நேசிக்கும்படி செய்ய எங்களுக்கு வரந்தாரும்.அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது அன்பின் மகிமைக்காகவும்,எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரந்தாரும் -ஆமென்.                                                        ஆன்மாக்களுக்காகச்    செபம் ஆண்டவரே !உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழியில் நடத்திச் செல்லும்.இவர்களைச் சார்ந்தவர்களையும் தீமையின் கொடுமையினின்று...

“அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”சங்கீதம் 112:1