† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

NO MORE?

“They have no more wine.” –John 2:3 We also say we have no more money, no more time, no more hope, peace, joy, etc. Although the Lord has promised to provide all our needs, we sometimes seem to be lacking our “daily bread” (Mt 6:11). When we have “no more,” we should listen to Mary and do whatever Jesus tells us (Jn 2:5). If we simply obey Him, He will take the water of our insufficiency and transform it into the wine of His plenty. Jesus has given us hundreds of commandments, and by His grace we can obey them...

இறைவனின் அருட்கரம்

விருந்தோம்பல் என்பது மத்திய கிழக்குப் பகுதியில் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்டது. அறிமுகமில்லாத நபர்கள் வந்தாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கவனிப்பது ஒரு யூதரின் முக்கியக் கடமையாக இருந்தது. அறிமுகமில்லாத நபர்களுக்கே இப்படி என்றால், விருந்தினர்களுக்கு எப்படிப்பட்ட உபசரிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பொதுவாக விருந்தில் திராட்சை இரசம் பரிமாறப்பட்டது. திராட்சை இரசம் மகிழ்ச்சியின், விருந்தின் அடையாளம். அதில் தண்ணீர் கலந்து பரிமாறினார்கள். ஆக, திருமண விருந்து வீடு. விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியின் இடம். இப்படிப்பட்ட இடத்தில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றால், நிச்சயம் அதைவிட திருமண வீட்டார்க்கு அவமானம் ஏதுமில்லை. அவர்களின் நிலைமை படுமோசமானதாக இருந்தது. பாலஸ்தீனம் பகுதியில் ஏழைகளும், வறியவர்களும் மிகுந்திருந்தனர். உணவுக்காக கடுமையாக அவர்கள் உழைக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கிறவர்களுக்கு, திருமண விருந்து என்பது, அந்த வேதனைகளை எல்லாம் மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணமாக, இருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு வழியே இல்லையென்றால்,...

INSTANT

“As He moved on He saw Levi the son of Alphaeus at his tax collector’s post, and said to him, ‘Follow Me.’ Levi got up and became His follower.” –Mark 2:14 Could the Lord work with you as He did with Levi? Could He call you to leave everything immediately? Jesus, being the Lord, doesn’t always work step-by-step. For example, Saul is out looking for some lost asses and, before he knows it, he’s anointed king (1 Sm 9:3; 10:1). Joseph goes to bed one night and before morning he and his family are on their way to Egypt (Mt...

ஆண்டவருடைய வார்த்தை அருமருந்து

தொழுகைக்கூடங்களில் இயேசு கற்பிப்பதற்கு உறுதியான எதிர்ப்பு கிளம்பிவிட்டது இன்றைய நற்செய்தியில் தெளிவாகிறது. எனவே, இயேசு தனது போதனையின் இடத்தை மாற்றுகிறார். இயேசுவின் போதனைக்கு இடையே வந்தவர்கள், யூதப்பாரம்பரியவாதிகள். ஏரிக்கரையில் நடந்துகொண்டு அவர் போதிக்கிறார். பாலஸ்தீனப்பகுதி போதகர்களின் போதனை இப்படித்தான் அமைந்திருக்கும். மத்தேயு மக்களால் வெறுக்கப்பட்ட மனிதர். ஏனெனில் அவர் ஒரு வரிதண்டுபவர். மத்தேயுவின் இதயத்தில் இது மிகப்பெரிய வலியாக இருந்திருக்கும். அவர் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும், இந்த சமுதாயம் அவர் பாவி என்று முத்திரை குத்தியிருக்கிறது. பாரம்பரிய யூதர்கள் நிச்சயம் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நேரத்தில் இயேசுவின் போதனை, அவருக்கு பெரிய ஆறுதல். இயேசுவின் போதனை அவருடைய உள்ளத்தை துளைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. மனம் மாற வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு இயேசுவின் வார்த்தை என்றுமே ஆறுதல்தான். ஆண்டவருடைய வார்த்தை, துன்பப்படுகிறவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. அது சாதாரணமாக வாசிக்கிறவர்களுக்கு அல்ல. மாறாக, உள்ளத்தில் துயரத்தினால்,...

செயலில் வெளிப்படும் விசுவாசம்

பாலஸ்தீனத்தில் இருக்கக்கூடிய வீடுகள் எப்போதும் திறந்தவண்ணமாய் இருக்கும். அதற்கு காரணம், உபசரிப்பு. யாரும் எந்த வேளையிலும் வீட்டிற்குள் வரலாம் என்பதன் பொருள். பயணிகள், வழிதவறி வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பது, யூதர்களின் வழக்கம். எளிமையான வீடுகளில் உபசரிப்பு அறை என்று தனியே எந்தவொரு அறையும் கிடையாது. கதவைத்திறந்தால் தெரு முழுவதும் தெரியும். அத்தகைய எளிமையான வீட்டில் இயேசு இருந்ததால், உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு, கூட்டம் அதிகமாக இருந்தது. பாலஸ்தீன வீடுகளில் மேற்கூரை பொதுவானது. மேலே இருந்து இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுக்களும் இருக்கும். இயேசு அவர்களைப்பார்த்த மட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. அவர்களின் விசுவாசத்தை உடனடியாகப் புரிந்து கொள்கிறார். அவர்களின் செயல் விசுவாசத்தைப்பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. உடனடியாக அவனுக்கு சுகம் கொடுக்கிறார். விசுவாசம் என்பது பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் ஒன்று செயல் வழியாக வெளிப்படுத்துவது என்பதை இந்த நற்செய்தி நமக்குச் சொல்கிறது. நமது வாழ்வில், நமது செயல்பாடுகள் விசுவாசத்தை...