† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

வாழ்க்கைக்கான ஞானம்

சீராக் 48: 1 – 15 சீராக்கின் புத்தகத்தில்காணப்படும் இந்த பாடல், ஒருவரை நினைத்து அவர் வாழ்ந்தபோது நடந்த மிகச்சிறந்த செயல்பாடுகளை நினைத்து புகழ்ச்சிமாலையாக பாடப்படும் பாடலாகக்காணப்படுகிறது. இது ஒரு புகழ்ச்சிப்பாடல். யாரை நினைத்து இந்த பாடல் பாடப்படுகிறது? இறைவாக்கினர் எலியா. கி.மு.869 ம் ஆண்டு, ஆகாபு அரசனுக்கு எதிராக அவர் இறைவாக்குரைத்தார். வடக்கு மகாணத்தின் மிகச்சிறந்த இறைவாக்கினராக அவர் பார்க்கப்படுகிறார். பாகால் தெய்வத்திற்கு எதிரான வழிபாட்டுமுறைகளை அழித்தொழித்தார். இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அதனை நேரில் கண்டவராக இறைவாக்கினர் எலிசா சுட்டிக்காட்டப்படுகிறார். இறைவாக்கினர் எலியாவின் மிகச்சிறந்த செயல்பாடுகள் இந்த வாசகத்தில் இடம்பெறுகிறது. இறைவாக்கினா் எலியாவின் புகழ்ச்சிபாடல் எதற்கக சீராக்கின் புத்தகத்தில் இடம்பெறுகிறது? சீராக்கின் புத்தகம் பல அறிவுரைகளை வாழ்க்கைக்குத் தருகிற புத்தகமாக அமைகிறது. நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும்? நாம் நம்முடைய வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? வாழ்க்கையில் நமக்கு இருக்கிற பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை நினைவூட்டுவதாக...

RELAY RACE

“He picked up Elijah’s mantle.” –2 Kings 2:13 Elijah passed on his mission, ministry, and power to Elisha. Do you have a mission to pass on? Do you know your mission? If you are doing something of long-term significance for the Lord, you need to disciple others to carry on that mission. In this way, the Church may be built up as an ever more effective instrument of establishing God’s kingdom on earth. To build the Church and to leave behind us a great spiritual legacy, we must: 1) be doing something of long-term significance, that is, doing God’s will...

எலிசாவின் பிடிவாதம்

2அரசர்கள் 2: 1, 6 – 14 1அரசர்கள் புத்தகத்தில் 17 ம் அதிகாரத்தில் எலியாவை காண்கிறோம். குறிப்பாக ஆகாபு அரசருக்கு எதிராக கடவுளின் வார்த்தையை துணிவோடு அறிவித்ததைப் படித்தோம். இரண்டாம் அரசர்கள் புத்தகத்தில் எலியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடப்படுகிறது. எலியா, தான் இறைவனால் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படப்போவதை அறிந்தவராக, எலிசாவை அவரைப் பின்தொடராமல் அங்கேயே தங்கியிருக்கச் சொல்கிறார். ஆனால், எலிசா அவரைப்பிரிவதற்கு மனமில்லாதவராக இருக்கிறார். எலிசாவின் பிடிவாதத்தைக் கண்டு, எலியாவும் அவரைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கிறார். இங்கு எலிசா, பிடிவாதமாக இறைவாக்கினரைப் பற்றிக் கொள்வதைப் பார்க்கிறோம். இறைவாக்கினர் எலிசாவிடம் இருக்க வேண்டிய பண்பானது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டிய பண்பாக இருக்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த பண்பு. இறைவாக்கினர் எலியா, எலிசாவைப் பின்தொடர வேண்டாம் என்று சொன்னது, தனக்கு நடக்கப்போவதை அறிந்ததனால். ஏனென்றால், அவர் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருக்கிறார். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிற...

WITH ENEMIES LIKE THIS, WHO NEEDS FRIENDS?

“‘…my enemy,’ Ahab said to Elijah.” –1 Kings 21:20 How good to have an enemy like Elijah the prophet! Elijah prophesied to his enemy, Ahab (1 Kgs 21:19ff). Those prophetic words cut to Ahab’s heart and led him to repentance and fasting (1 Kgs 21:27). Ahab’s heartfelt reaction to the prophecy of his enemy even spared him from destruction during his lifetime (1 Kgs 21:29). “For if a man meets his enemy, does he send him away unharmed?” (1 Sm 24:20) Or does a man send his enemy away blessed, prayed for, and enriched? Elijah, the enemy, sent Ahab home...

இறையடியார்கள்

1அரசர்கள் 21: 17 – 29 கடவுள் முன்னிலையில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர் அரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதை அழுத்தம் திருத்தமாக இன்றைய வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆசைப்பட்ட ஆகாபு அரசன், தன் மனைவியின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, அவனைக் கொலை செய்துவிடுகிறான். அந்த தோட்டத்தை அபகரிப்பதற்காகச் செல்கிறான். ஆனால், ஆண்டவர் இறைவாக்கினர் எலியாவை அனுப்புகிறார். தவறு செய்வனான ஆகாபு மட்டுமல்ல, அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அவனுடைய மனைவி ஈசபேலும் இறைவனின் தண்டனைத்தீர்ப்புக்கு ஆளாகிறாள். இந்த பகுதியில், இறைவாக்கினரின் பணியை நாம் சற்று ஆழமாகப் பார்க்கலாம். வரலாற்றின் துணிவுள்ள சில மனிதர்களின் விழுமியங்களை இங்கே எலியாக படம்பிடித்துக் காட்டுகிறார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவருடைய தவறை அவருடைய நெஞ்சுக்கு நேரே நின்று எதிர்கொள்வது தான் அந்த விழுமியம். ஆகாபு அரசன் தீய, கொடூரமான, ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவனுக்கு எதிராக, அவனுடைய...