இரக்கமுடையோராய் வாழ்வோம் (மத்தேயு 5: 7)
அன்பும், பிரியமும் உள்ள இணையதள உள்ளங்களுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள். கடவுள் நம்மை எதற்காக படைத்தார். ஏன்
ஒருவனை படைத்து அவர் மூலம் உலக மக்களை இந்த உலகத்தில் நிரப்பினார். அவருக்கு வல்லமை இல்லையோ?அவர் நினைத்திருந்தால் ஒரே தடவையில் அநேக மக்களை உருவாக்கி இருக்க முடியும். பிறகு ஏன் ஒருவனை உருவாக்கி அவன் மூலம் உலகத்தை நிரப்பினார்.
யோசிக்க வேண்டிய விஷயம் அல்லவா?
ஏதேன் தோட்டத்தில் யாவே கடவுள் மண்ணிலிருந்து ஆதாமை ஏன் அவருடைய சாயலில் உருவாக்கினார். நாமும் அவரைப்போல் வாழ வேண்டும். அவருடைய செல்லக் குழந்தைகளாய் அவருடைய மடியில் தவழ வேண்டும். அவருடைய பண்புகளை நாமும் பின்பற்ற வேண்டும்
அவருடைய சொல்லுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அவரையே நாம் எப்பொழுதும் துதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துதான் நம்மை ஆசையோடு
உருவாக்கினார். ஆனால் நாமோ எல்லா விஷயங்களிலும் தவறு செய்கிறோம். சுயநலமாக வாழ்கிறோம்.
பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். 1 திமொத்தேயு 1:15 கூறுகிறது. நாம் எல்லோரும் தவறு செய்து அவருடைய மகிமையை இழந்துவிட்டோம். அதை திரும்ப கொடுக்கவே கிறிஸ்து இவ்வுலகத்திற்கு திரும்ப வந்தார். அதனால் அவரைப்போல் தியாகமும், உண்மையும், பரிசுத்தமும், பொ றுமையும், இரக்கமும் கொண்டு வாழ்ந்து இழந்த நம் மகிமையை அவரிடம் கேட்டு பெற்றுக்கொள்வோம். நாம் பிறருக்கு இரக்கம் காட்டினால் நமக்கு தானே கிடைக்கும்
இதைத்தான் நம் ஆண்டவர் நம்மை உலத்திற்கு வெளிச்சமாகவும், பூமிக்கு உப்பாகவும் இருக்கும்படி சொல்லியிருக்கிறார். மத்தேயு 5 ம் அதிகாரத்தை நாம் ஒவ்வொருவரும் வாசித்து அதன்படி வாழ முயற்சி செய்வோம்.
ஜெபம்:
எங்கள் அன்பின் இறைவா!! நாங்கள் செய்த பாவத்தை போக்க உம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தீர். அதற்காகவே இந்த உலகத்தில் வந்தீர். உமக்குத்தான் எங்கள்மேல் எத்தனை அன்பு. நீர் அதிகாரம் செய்கிறவராய் வராமல் எங்கள் பாவங்களை சுமக்க வந்தீரே. இதை நாங்கள் ஒரு சின்ன விஷயத்தில் கூட மறக்காமல் உமது தியாகத்தை, உமது அன்பை என்றென்றும் காத்து நடக்க எங்களுக்கு போதியும் ஐயா. உம்மைப்போல் இரக்கம் உள்ளவர்களாய் வாழ அருள் கூரும். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும்.ஆமென்!! அல்லேலூயா!!!.