தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் – அதிதூதர்கள் விழா
ஈனோக்கு எழுதிய நூல், ஏவபடாத நூலாக பார்க்கப்படுகிறது. எனவே அது விவிலியத்தின் ஒரு நூலாக இணைக்கப்படவில்லை. அது யூதப்பாரம்பரியத்திலிருந்து வந்த நூல். ஏவப்படாத நூலாக இருந்தாலும், விவிலிய வரலாற்றுப்பிண்ணனியை அறிந்து கொள்ள அது கொஞ்சம் உதவுகிறது. கடவுளுடைய திருமுன்னிலையில் ஏராளமான வானதூதர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முதன்மைத் தூதுவர்களாக ஏழு பேர் இருக்கிறார்கள் என இந்த புத்தகத்திலிருந்து நாம் அறிய வருகிறோம். அவர்கள், கபிரியேல், மிக்கேல், இரபேல், உரியல், இரகுவேல், ரெமியேல், செரேகுவேல். அவர்களில் முதன்மைத்தூதுவர்களாக குறிப்பிடப்படுகிறவர்கள் இன்றைக்கு நாம் திருவிழாவைச்சிறப்பிக்கிற கபிரியேல், மிக்கேல், இரபேல். மிக்கேல் மற்றும் கபிரியேல் தூதுவர்கள் இஸ்லாம் சமயத்திலும், யூத சமயத்திலும் தூதுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். கத்தோலிக்க விவிலியத்தில் தோபித்து புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், தோபித்து புத்தகத்தை “உறுதிப்படுத்தப்பட்ட” புத்தகமாக மற்ற கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாததனால், இபேலையும் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கத்திருச்சபையின் பாரம்பரியப்படி, எண்ணற்ற தூதுவர்கள் கடவுள் திருமுன்னிலையில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, ஆர்ப்பரித்து, கடவுளை மகிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே...