Author: Jesus - My Great Master

இறைவனின் இரக்கம்

இயேசுவை மெசியாவாக பார்த்தவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் நிச்சயம் அதிர்ச்சியையும், வியப்பையும் கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், மெசியாவின் காலம் பொற்காலமாகக் கருதப்படும் என்றும், மெசியா மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்பார் என்றும் மக்கள் நம்பினர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளையுமே நிறைவேற்றுவதாக தெரியவில்லை. தீ என்பது தீர்ப்பைக்குறிக்கக்கூடிய உருவகம். இயேசு மனுமகன் மீண்டும் வரும்நாளை தீர்ப்பு நாளாகக்கருதுகிறார். மெசியா வரும்போது இஸ்ரயேல் மக்களைத்தவிர அனைத்து மக்களையும் தீர்ப்புக்குள்ளாக்குவார் என்று யூதர்கள் நினைத்தனர். யூத குலத்திலே பிறந்தாலே மீட்பு உறுதியாகிவிட்டதாக அவர்கள் நம்பினர். யூத குலத்தில் பிறந்தாலே தங்களுக்கு கடவுளின் மன்னிப்பு கிடைத்துவிடும் என்ற எண்ணம் அவர்களிடையே ஆழமானதாக இருந்தது. எனவே தான் அவர்கள் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் தங்களைக்கருதினர். ஆனால், இயேசுவின் போதனை அவர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தைக்கொடுத்தது. ”நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு உகந்தவர்களாக முடியும்” என்று யாக்கோபு (2: 24) தன்னுடைய திருமுகத்திலே குறிப்பிடுகிறார். நமது வாழ்வு...

COME, LORD JESUS, TODAY! (see Rv 22:20)

“Be on guard, therefore. The Son of Man will come when you least expect Him.” –Luke 12:40 Mass Readings: October 19 First: Ephesians 3:2-12; Resp: Isaiah 12:2-6; Gospel: Luke 12:39-48 When we expect the world to end and Jesus to come back at any time, we are: on guard against the evil one (see Lk 12:40; 1 Pt 5:8-9), trying to be “faithful, farsighted” stewards for the Lord (Lk 12:42), busy (Lk 12:43) showing our love for Jesus by feeding His sheep, that is, His people (see Jn 21:15-17; Lk 12:42), loving others rather than hurting them (see Lk 12:45),...

விவேகமுள்ள பணியாள்

அறிவாளி யார்? அறிவீனன் யார்? என்பதற்கு இயேசு இன்றைய உவமை வாயிலாக பதில் சொல்கிறார். மத்திய கிழக்குப் பகுதியில், வேலைக்காரர்களுக்கு அதிகமான அதிகாரத்தை தலைவர் கொடுத்திருந்தார். ஒரு வேலைக்காரன் அடிமையாக இருக்கலாம். ஆனால், மற்ற வேலைக்காரர்களுக்கு, அவனைப் பொறுப்பாக தலைவர் நியமிக்கிறபோது, அவனுக்கு நிச்சயம், அதிகாரங்கள் கொடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற அதிகாரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துகிறவனே, அறிவாளி, மற்றவன் அறிவீனன் என்பது, இயேசு தரக்கூடிய செய்தி. அறவீனனாக இருக்கிற வேலையாள் இரண்டு தவறுகளைச் செய்கிறான். 1. ”தன் மனம் நினைத்ததை செய்ய வேண்டும்” என்று தனக்குள்ளாக நினைக்கிறான். தலைவர் அவனிடம் பொறுப்பைத்தான் விட்டிருக்கிறார். அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது வேலைகளை நான் செய்துகொண்டிருப்பேன், என்று நினைக்காமல், தலைவர் இருந்தால் ஒன்று, இல்லையென்றால் ஒன்று, என்று, அவன் நினைக்கிறான். இது நேர்மையற்றத்தனம். 2. ”தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்”. தான் செய்வது நேர்மையற்றத்தனம் என்பது, அந்த வேலைக்காரனுக்கு தெரிந்தே இருக்கிறது....

NOT A DOCTORAL THESIS

“I have no one with me but Luke.” –2 Timothy 4:11 Mass Readings: October 18 First: 2 Timothy 4:10-17; Resp: Psalm 145:10-13,17-18; Gospel: Luke 10:1-9 St. Luke was a doctor (Col 4:14). The Bible commands us to honor doctors, for their profession has been established by God (Sir 38:1). Although Luke had such a distinguished profession (see Sir 38:3), he apparently put it aside in the light of the surpassing knowledge of His Lord Jesus Christ (Phil 3:8). In the fifty-two chapters of the Bible that Luke compiled (Luke and Acts), there is hardly any indication of him being a...

கடவுளோடு இணைந்திருப்போம்

எண் 72 என்பது யூதர்களுக்கு ஓர் அடையாள எண். மூப்பர்கள் 72 பேரை இஸ்ரயேல் மக்களுக்கு அதிகாரிகளாக, பெரியவர்களாக ஏற்படுத்துகிறார். எண்ணிக்கை 11: 16 ”ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா. அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்”. யூதத்தலைமைச்சங்கத்திலும் 72 உறுப்பினர் இருந்தார்கள். உலகத்தில் இருக்கிற மொத்தநாடுகளின் எண்ணிக்கையும் 72 இருப்பதாக யூதர்கள் நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை அனைவருக்கும் பொதுவானவராக, மீட்பராக அறிமுகப்படுத்துவதால், இந்த எண்ணைப்பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்தப்போதனை போதிக்கக்கூடியவர்களுக்கான ஒழுங்குகளைத்தருகிறது. போதிக்கக்கூடியவர்கள் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படக்கூடாது. அவர்களுக்கு கடவுள் தான் சொத்து. அதேபோல போகிற வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்படுவத, தங்களுடைய இலக்கிலிருந்து அவர்கள் விலக அது காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக. கிறிஸ்துவை நோக்கிச்செல்கின்ற நம்மிலிருந்து நாம் எந்த காரணத்தைக்கொண்டும் விலகக்கூடாது. நமது எண்ணங்கள், சிந்தனைகள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்துமே கிறிஸ்துவை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும்....