Author: Jesus - My Great Master

”ஆண்டவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார்”

இஸ்ரயேல் மக்கள் உலகத்தை மூன்றாகப் பிரித்துப் பார்த்தார்கள். விண்ணகம், மண்ணகம், பாதாளம் என்று வகைப்படுத்தினார்கள். கடவுள் விண்ணகத்தில் இருப்பதாகவும், அங்கிருந்து அவர் மக்களை வழிநடத்துவதாகவும் நம்பினர். எப்போதெல்லாம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் கடவுள் அவர்களை விடுவிக்க அவர் எல்லாவித முயற்சிகளையும் எடுப்பார் என்கிற நம்பிக்கை, இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இருந்தது. அந்த நம்பிக்கையின் பிண்ணனியில் தான் இந்த திருப்பாடல் (திருப்பாடல் 102: 10 – 11, 12 – 13, 14 – 15 ) எழுதப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் மட்டும் இந்த உலகத்தில் வாழவில்லை. அவர்களோடு இன்னும் பல நாட்டினரும், இந்த உலகத்தில் வாழ்ந்தார்கள். ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் அவர்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. எனவே, ஒருவர் மற்றவருக்கெதிராக போர்தொடுத்தனர். பொருட்சேதங்களை வேற்றுநாட்டினர் ஏற்படுத்தினர். இஸ்ரயேல் மக்களின் நிலையோ மிகப்பரிதாபமானதாக இருந்தது. அவர்களுக்கு என்று எந்த ஆதரவும் இல்லை, கடவுள் ஒருவரைத்தவிர. எனவே தான்,...

REST AREA

“But the dove could find no place to alight and perch, and it returned to him in the ark.” –Genesis 8:9 Mass Readings: February 15 First: Leviticus 19:1-2,11-18; Resp: Psalm 19:8-10,15;Gospel: Matthew 25:31-46 After forty days and nights of the flood, Noah sent out a raven. Then he sent out a dove three times. On the final occasion, the dove did not return to the ark, for it had found a place to rest (Gn 8:12). That meant destruction had ended and re-creation had begun. The dove resting on Jesus at His baptism meant the Spirit was beginning to re-create...

”ஆண்டவரே! நான் உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்”

நன்றி என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த நன்றி என்ற சொல்லின் பொருள் அறியாது, நன்றி இல்லாத ஒரு தன்மை இந்த உலகத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, நாம் வாழக்கூடிய இந்த உலகம், மற்றவர்களைப் பயன்படுத்த அதிக முயற்சி எடுக்கிறது. எந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்தி இலாபம் அடைய முடியுமோ, அந்த அளவுக்கு மற்றவர்களைப் பயன்படுத்துவதில் அதிக மெனக்கெடுகிறது. பயன்படுத்திய பிறகு, அவர்களை தூர எறிந்துவிடுகிறது. இதுதான் நாம் வாழக்கூடிய உலகம். ஆனால், திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறவராக இல்லை. அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அனைத்து நலன்களுக்காகவும் நன்றி செலுத்துகிறார். அந்த நன்றியின் வெளிப்பாடு தான், இன்றைய திருப்பாடல் (திருப்பாடல் 116: 12 – 13, 14 – 15, 18 – 19). கடவுளிடத்தில் கேட்டதைப் பெற்றுவிட்டோம், இனி கடவுள் தேவையில்லை என்று, அவர் கடவுளை விட்டு விலகவில்லை....

UNDER THE INFLUENCE

“Be on your guard against the yeast of the Pharisees and the yeast of Herod.” –Mark 8:15 Mass Readings: February 14 First: Deuteronomy 26:4-10; Resp: Psalm 91:1-2,10-15;Second: Romans 10:8-13;Gospel: Luke 4:1-13 I worked in a bakery long ago. The baker would break up a solid block of yeast into small crumbs. Next he painstakingly kneaded the crumbs of yeast all throughout the batch of dough. Then he set aside the dough on the baking table for a while “until the whole mass of dough began to rise” (Lk 13:21). It was amazing to watch such small crumbs of yeast cause...

இருக்கிறதா, இல்லையா ?

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21) இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய, ஆனால் சுவையான நிகழ்வைச் சொல்கிறது. மாற்கு நற்செய்தியாளருக்கே உரிய தனித்தன்மைகளுள் ஒன்று இத்தகைய சிறு, சிறு தனித்தன்மை வாய்ந்த செய்திகளைப் பதிவு செய்திருப்பது. படகிலே பயணம் செய்துகொண்டிருக்கும்போதுதான் சீடர்களுக்கு நினைவு வருகிறது தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் என்று. படகில் அவர்களிடம் ஒரேயொரு அப்பம் மட்;டுமே இருந்தது. அந்த ஒரு அப்பத்தைக் கொண்டு எத்தனை பேருக்கும் உணவளிக்கும் ஆற்றல் மிக்க ஆண்டவர் தம்முடன் இருந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதையும் மாற்கு இயேசுவின் வாய்மொழி வழியாகப் பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்வு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது: நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், என்ன இல்லை என்றே நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அது தவறு. பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நம்மிடம் “அது இல்லை, இது இல்லை” என்று நாம் புலம்பிக்கொண்டிருக்கலாம். “இது...